HBD Motta Rajendran : மொட்ட ராஜேந்திரனுக்கு முடி கொட்டிய காரணம் இதுதானா?
1992 ஆம் ஆண்டில் 'திருமதி பழனிசாமி' படத்தில் தன் சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராஜேந்திரன், பல படங்களில், குறிப்பாக மலையாள படங்களில் ஸ்டண்ட் டபுளாக பணியாற்றினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ஆசை' (1995), 'ஏகன்' (2008) ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவாவுக்கு உதவினார்.
மலையாளப் படம் ஒன்றில், பாலத்தில் இருந்து குளத்தில் விழும் ஸ்டண்ட் செய்யும் போது ராஜேந்திரன் மாசுபட்ட தண்ணீர் நிறைந்த குளத்தில் விழுந்தார். இதனால் இவரின் தலைமுடி கொட்டியது.
விபத்தை எண்ணி சற்றும் மனம் தளராத ராஜேந்திரன், வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் திரையுலகை அசத்தினார்.
தோற்றத்தினாலும், வித்தியாசமான குரலினாலும் பலரை ஈர்த்த ராஜேந்திரனுக்கு, மொட்டை ராஜேந்திரன் என்ற அடையாளம் கிடைத்தது.
ஜெண்டில் மென், லேசா லேசா, பிதாமகன், தொட்டி ஜெயா, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -