Kiccha Sudeep : இயக்குநராக கம்-பேக் கொடுக்கவிருக்கும் கிச்சா சுதீப்.. மகிழ்ச்சியில் கன்னட ரசிகர்கள்!
கன்னட திரையுலகில் முன்னணி கதநாயகனான வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப்.
தமிழில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானார். அத்துடன், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கிச்சா படத்தின் புதிய அறிவிப்பு வந்துள்ளது. அதில், ‘கடவுள் மன்னிப்பார்; நான் மன்னிக்க மாட்டேன்’என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது.
இன்று இவரின் 50வது பிறந்தநாள் கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, கிச்சா படம் இயக்க உள்ளதால் ரசிகர்கள் இவருக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கிச்சா சுதீப், சாந்தி நிவாசா, வீர மதகரி,வெறும் மாத் மாதல்லி,கெம்பேகவுடா, மாணிக்யா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.