Chiranjeevi Knee Surgery : முழங்கால் பிரச்சினையால் டெல்லி மருத்துவமனையில் அனுமதியான நடிகர் சிரஞ்சீவி!
ஜோன்ஸ் | 17 Aug 2023 03:04 PM (IST)
1
டோலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான படம் போலா சங்கர்
2
இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ முகி, வெண்ணெலா கிஷோர், ரகு பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
3
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக போலா சங்கர் எடுக்கப்பட்டது.
4
இதன் படப்பிடிப்பின் போது நடிகர் சிரஞ்சீவி முழங்கால் வலியால் அவதிபட்டுள்ளார்.
5
இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
6
தற்போது அவர் அங்கு ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.