Annamalai 31 Years : ‘இந்த நாள் உன்னோடைய காலண்டர்-ல குறிச்சு வச்சுக்கோ..’ 31 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாமலை இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App90களில் ரஜினியின் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் ஆக வெற்றி பெற்று வந்ததால் கமர்ஷியல் கிங்காக வலம் வந்தார் ரஜினி. அண்ணாமலை படமும் அதற்கு விதி விளக்கல்ல.
இந்த படத்தில் குஷ்பூ, மனோரமா, நடிகர் சரத்பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி என பலரும் நடித்திருந்தனர்.
பால்காரனாக வரும் ரஜினியும் பணக்கார வீட்டு பையனான சரத்பாபுவும் சிறு வயது நண்பர்களாக இருக்கிறார்கள்.
நகரின் நடுவே இருக்கும் ரஜினியின் இடத்தை ஏமாற்றி சரத்பாபுவின் அப்பா ராதாரவி பெற்றுக்கொள்வார். அதற்காக நியாயம் கேட்கப்போன இடத்தில் ரஜினியை சரத்பாபு அவமானப்படுத்துவார்.
இதனால் நட்பு துரோகமாக மாறும். ரஜினியின் வீட்டை இடித்து அவரை சரத்பாபு நடுத்தெருவுக்கு கொண்டு வருவார். இதற்கு ரஜினி எடுக்கும் பழிக்குப்பழியே இப்படத்தின் மீத கதை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -