16 years of Paruthiveeran : கார்த்தி அறிமுகமாகிய பருத்திவீரன் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவு..!
2000 ஆம் ஆண்டுக்கு பின், ஒரு படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அதில் “பருத்தி வீரன்” படம் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த நினைவுகளை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
சூர்யாவின் மாறுபட்ட காதல் படமான ‘மௌனம் பேசியதே’,க்ரைம் த்ரில்லர் படமான ஜீவாவின் ‘ராம்’ என 2 படங்களில் ரசிகர்களை கவர்ந்தாலும், அமீரின் 3வது படமான பருத்திவீரன் படத்தின் ஆரம்பமே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
பருத்திவீரனுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா அதற்கு முன்னால் 40 படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் அவரின் முதல் கிராமத்து கதைக்கள படமாக பருத்தி வீரன் அமைந்தது. சவால்களுக்கு மத்தியில் சாதித்து காட்டினார் யுவன்
பருத்திவீரனாக கார்த்தி, முத்தழகாக பிரியாமணி, கழுவத்தேவனாக பொன்வண்ணன், செவ்வாழையாக சரவணன், டக்ளஸ் ஆக கஞ்சா கருப்பு என சினிமா ரசிகர்களை எப்போது கேட்டாலும் அந்தந்த கேரக்டரின் பெயர்களை சொல்வார்கள்.
இந்த படத்தில் யதார்த்தமாக அமைந்த காட்சிகள் எவர்க்ரீன் படமாக பருத்திவீரனை மாற்றியது.
மேலும், இடையிடையே வரும் கஞ்சா கருப்பு காமெடியும் மீம் மெட்டிரியலாக மாறியது. மொத்தத்தில் இந்த படம் என்றென்றும் நினைவில் இருக்கக் கூடிய படமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -