Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Union Budget 2023 : 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!
அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கும். உணவு தானிய விநியோகத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். பழங்குடியின மக்கள் வசிக்கும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஏகலைவா பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் மூலம் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைவார்கள்.
தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் பிராந்திய மற்றும் ஆங்கில மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம் கற்பிக்கும் கர்மயோகி திட்டம். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
2047ம் ஆண்டில் இந்தியாவில் 0-40 வயது வரையிலான மக்களுக்கு ரத்த சோகையை முற்றிலும ஒழிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதில் 100 சதவீத இயந்திரங்களை பயன்படுத்த முடிவு. ரூபாய் 700 கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைன் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கான தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூபாய் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டி 1 சதவீதமாக குறைக்க நடவடிக்கை
அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள ஆவணமாக பான் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தலாம். ஆதார் கார்டு, பான் கார்டு, டிஜி லாக்கர் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
5ஜி மொபைல் செயலி உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கான சேமிப்புத் திட்டம். செல்போன் மற்றும் தொலைக்காட்சி உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது . சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு.
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்கள் அகற்றும் திட்டத்திற்கு கூடுதல் நிதி. பசுமை எரிசக்தி நடைமுறைக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
தனி நபர் வருமான வரி விதிப்பு உச்சவரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -