Best 4x4 Cars: நாட்டின் டாப் 4x4 கார் மாடல்கள்.. அதுவும் ரூ.30 லட்சம் பட்ஜெட்டிற்குள்!
நாட்டில் ரூ.30 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 4x4 கார்களின் டாப் 5 பட்டியல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமஹிந்திரா ஸ்கார்பியோ N என்பது வலுவான கட்டமைப்பை கொண்ட எஸ்யுவி ஆகும். மிகவும் திறமையான ஆஃப்-ரோட் செயல்முறையை கொண்டுள்ளது. 4x4 ஸ்கார்பியோவின் ஆரம்ப விலை ரூ.18.50 லட்சம்
மஹிந்திரா தார் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோட் வாகனங்களில் ஒன்றாகும். தாரின் குறுகிய வீல்பேஸ் வனப்பகுதியில் பயணம் செய்ய சிறந்த காராக உள்ளது. 4x4 மாடல்களின் ஆரம்ப விலை ரூ.14.99 லட்சம்
Isuzu D-Max V-Cross அல்லது இந்தியாவில் V- கிராஸ் ஒரு பிரபலமான நான்கு சக்கர டிரக் ஆகும். பழைய மாடலாக இருந்தாலும், சிறந்த திறனை கொண்டுள்ளது. இது சரியான 4x4 அனுபவத்தை வழங்குகிறது. ஆரம்ப விலை ரூ.23.49 லட்சம்
மாருதி சுசுகி ஜிம்னி இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட கார்களில் ஒன்றாகும். கடினமான பாதைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். ஜிம்னியின் ஆரம்ப விலை ரூ.12.74 லட்சம்
ஃபோர்ஸ் கூர்கா இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் திறமையான வாகனங்களில் ஒன்றாகும். இது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகனுடன் அதன் பல பாகங்களை பகிர்ந்து கொள்கிறது. கூர்காவின் ஆரம்ப விலை ரூ.15.10 லட்சம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -