Navratri Wishes: நவராத்திரி கொண்டாட்டம்- சிறப்பு புகைபடத் தொகுப்பு இங்கே
இந்தியாவில் இந்துக்களால் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளும் மிகவும் முக்கியமானது நவராத்திரி. 9 இரவுகள் என்று அர்த்தப்பட்டாலும் கூட 10 நாட்கள் விழா இருக்கும். துர்கை அன்னையைப் போற்றும் விழா இது. அன்னையின் 9 அவதாரங்களையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளில் பூஜித்து வழிபடுவர். நவராத்திரியின் நிறைவு நாள் விஜயதசமி. அன்றைய தினம் தான் தசரா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று தொடங்கிய இந்த விழா வரும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, அடுத்த நாள் 16 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவு பெறுகிறது.
நவராத்திரியின் இறுதி நாள் அக்டோபர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தசமி திதி நடைபெறுகிறது. தசமி திதியில் தான் விஜய தசமி கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இதுவே நவராத்திரியின் இறுதி நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நிறைவு நாளில் துர்கா தேவிக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்
ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள். நவராத்திரியைக் கொண்டாடுவதால் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம் எனப் பெரியோர்கள் கூறுகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -