தாய்லாந்தைச் சேர்ந்த டாட்டூ கலைஞரான ஓங் டாம் சொரோட் என்பவர், 8 பேரை திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. பொதுவாக ஒரு திருமணம் செய்துகொண்டே, என்னால் என் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடியவில்லை. எப்போது பார்த்தாலும் சண்டை சண்டை என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். 


இதிலும், இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நபரின் நிலைமை தினந்தோறும் திண்டாட்டம்தான். அப்படி இருக்கையில் யார் இந்த மனிசன் ஒரு திருமணம் செய்துகொண்டு ஒரு மனைவியையே சமாளிக்க முடியாத இந்த காலத்தில், எப்படி எட்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக என்று அனைவருக்கும் கேள்வி வரத்தானே செய்யும்.


ஓங் டாம் சொரோட், தன்னால் தன் மனைவிகளுக்குள் சண்டை வரகூடாது என்று கருதி, ஒருவருடன் ஒரு நாள் என்று அட்டவணை போட்டு அவருடன் படுக்கையறையை அன்றைய நாளில் யார் பகிர்ந்து கொள்ள வேண்டும் முதல் தயார் நிலையில் இருக்கிறார். 


இதுகுறித்து அந்த நபர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "அத்தனை மனைவிகளும்  தன் மீது மிகுந்த காதலுடனும் இருக்கின்றனர். நான் எனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்தேன் என்றார். 


தொடர்ந்து, அந்த மனைவிகள் அளித்த பேட்டியில் தங்கள் கணவர் பூமியில் மிகவும் கனிவானவர், மிகவும் அக்கறையுள்ள மனிதர் என்றும், அனைவரும் ஒன்றாக நன்றாகப் பழகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அப்பொழுது,ஓங் டாம் சொரோட்  தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்து திருமணம் செய்துகொண்டேன் என்றார். 


தனது இரண்டாவது மனைவியான நோங் எல்லை சந்தையில் சந்தித்தார் எனவும்,  அவரது மூன்றாவது மனைவியான நோங் நானை மருத்துவமனையில் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். அவர் தனது நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகளை முறையே Instagram, Facebook மற்றும் TikTok வழியாக சந்தித்து காதலில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். 


அதேபோல், ஏழாவது மனைவியான நோங் பிலிம், ஃபிரா பாத்தோம் செடி கோவிலுக்குச் சென்றபோது பார்த்ததாகவும், பட்டாயா கடற்கரையில் தனது நான்கு மனைவிகளுடன் விடுமுறையில் இருந்தபோது தனது எட்டாவது மனைவியான நோங் மாயை சந்தித்து காதலில் விழுந்துள்ளார்.


ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என்று மனைவிகளுடன் கேள்வி எழுப்பியபோது, அவர் காட்டிய அன்பாலும், அவரின் நல்ல குணத்தாலும்தான் அவரை திருமணம் செய்துகொள்ள காரணமாக இருந்ததாக தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண