கெல்லி மேரி கேம்ப்பெல் என்ற பெண் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள திருமண ஆடை தாமதமாக வந்தது மட்டுமல்லாமல், உடையின் அளவு பெரியதாக இருந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தார்.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  மூன்று முறை திருமண தேதிகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், கெல்லி இந்த ஆண்டு மார்ச் 31 அன்று திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமணத்திற்கு தனக்கு ஏற்ற ஆடையை அணிய விரும்பினார். மேலும் அவரது ஆடை தன்னை இளவரசி போல் உணர வைக்கும் என்றும் எதிர்பார்த்தார்.


இதற்காக ரிக்கி தலால் என்ற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள லிரி சாரா ஆடையை சி பிரைடல் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளார். கெல்லியின் திருமண ஆடை திருமணத்திற்கு ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு முன்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் திருமணத்திற்கு இன்னும் நான்கு வாரங்களே இருந்த நிலையில், உடை இன்னும் வராததால் கெல்லி பதறத் தொடங்கினார். அவர் இதுதொடர்பாக நிறுவனத்திடம் தொடர்புகொண்டார். ஆனால், அவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், காத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஆடை இருக்கும் இடத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு வாரம் கடந்துவிட்டது.




பின்னர், திருமணத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, கெல்லிக்கு ரஷ்ய படையெடுப்பு காரணமாக உக்ரைன் எல்லையில் அவரது ஆடை சிக்கியதாகக் கூறப்பட்டது. ரிக்கி தலால், ஆடை வடிவமைப்பாளர், இஸ்ரேலை தளமாகக் கொண்டவர். ஆனால் உக்ரைனில் ஆடைகள் தயாரிக்கும் கடை உள்ளது. அவரது கனவு ஆடை இறுதியாக அவரது திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்து சேர்ந்தது. ஆனால், கெல்லி தனது கனவு ஆடையை அணிந்தபோது, ​​​​அவர் ஆர்டர் செய்ததை விட மூன்று அளவு பெரிய ஆடை என்பதால்  அதிர்ச்சியடைந்தார். ஆடை உருளைக்கிழங்கு மூட்டை போல இருக்கிறது என்று கூறினார்.


கெல்லி, ஆடை நிறுவனத்திடம் தனது ஆடை ஏன் மூன்று அளவு பெரியதாக இருந்தது என்று கேட்டபோது, ​​அதற்கு உங்களின் எடை குறைந்ததால் தான் என்று பதில் கூறினார்கள். 


கெல்லி பின்னர் தனது ஆடையின் அளவை மாற்ற வேண்டியிருந்தது, அதற்காக அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் மாற்றத்திற்குப் பிறகும், அந்த உடை அவருக்கு செளகரியமாக இல்லை. சங்கடமாக உணர்ந்தார். இதுபோன்ற பெரிய நிகழ்வுகளுக்கு ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டாம் என்றும் கெல்லி மற்ற மணப்பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண