இலங்கையில் மிகப்பெரிய மக்கள் புரட்சியின் மூலம் முந்தைய ஆட்சியாளர் நாட்டை விட்டு துரத்தப்பட்டு, தற்காலிக அதிபரும் பொறுப்பேற்ற நிலையில், நிரந்தர அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரிய கட்சிகளைச் சார்ந்த நான்கு பேர் போட்டியிடுகிறார்கள். ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக டலஸ் அழகப்பெருமவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ரணில் விக்ரமசிங்கவும் களம் இறங்கியுள்ளனர்.


அதேபோல, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச போட்டியில் குதித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுரகுமார திசாநாயக்க போட்டியிடுகிறார். ஜே வி பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த கட்சி அதிதீவிர சிங்கள கட்சியாகும்.


இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒன்று சிங்களர்கள். மற்றொன்று தமிழர்கள். மேல் சொன்ன கட்சிகள் அனைத்தும் சிங்கள கட்சிகள் ஆகும். தமிழர் கட்சிகளோ மூன்றாக சிதறியிருக்கின்றன. தமிழ் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி. மலையகத் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். 


ஈழத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு. இப்படி இரண்டு தேசிய இனங்கள் இருந்தாலும் கூட. ஏதாவது ஒரு தமிழர் கட்சியின் ஆதரவு இல்லாமல் பிரதமர் மற்றும் அதிபர் பதவிக்கு வர இயலாது. இரண்டு தேசிய இனங்கள் இருக்கின்ற இலங்கையில் இதுவரை தமிழ் இனத்தின் சார்பாக அதிபரோ பிரதமரோ தேர்ந்தெடுக்கப்பட்டதே இல்லை.


இன்று இருக்கும் சூழ்நிலையில் ஒரு எம்பி யின் ஆதரவு கூட இல்லாத ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் தற்காலிக அதிபராகவும் இருந்து கொண்டு நிரந்தர அதிபருக்கு போட்டியிடுகிறார். இந்த தருணத்தை அழகாக பயன்படுத்திக் கொண்டு தமிழர்கள் சார்பில் இருக்கும் காட்சிகளில் ஏதாவது ஒரு உறுப்பினர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால்  கண்டிப்பாக வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.


ஆனால், இலங்கையில் சிங்கள இனத்திடம் இருக்கும் ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை. வரலாற்றில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் எவ்வாறு பிரிந்து தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்களோ அதே நிலைதான் இன்றும் இலங்கைத் தமிழர்களிடம் நிலவுகிறது. ஆகவே இலங்கையில் ஒரு தமிழர் பிரதமராகவோ அதிபராகவோ வருவதற்கான இன்றைய சூழ்நிலையை இவர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்களா என்பது சந்தேகமே.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண