அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் விண்டேஜ் கேமரா, ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) எழுதிய கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு புத்தகம் ஆகியவற்றை பரிசளித்தார்.


அமெரிக்காவில் பிரதமர் மோடி


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,அவரது மனைவி ஜில் கேக்கப் பைடனின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையிலும் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோ பைடன், ஜில் ஜேக்கப் பைடன் இருவருக்கும் பிரதமர் மோடி பத்து வகையான பொருட்கள் அடங்கிய சந்தனப்பெட்டி பரிசளித்தார். பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 7000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். 




பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு


ஜோ பைடனின் மனைவி அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரத்தினை பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த வைரத்தின் சிறப்பு அது தயாரிக்கப்பட்ட விதம்தான். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இந்த வைரம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மற்றும் காற்று சக்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பன்முகத் தன்மை வாய்ந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தயார் படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, வைரம் தயாரிக்கப்படும் முறை இல்லைமால், க்ரீன் தொழில்நுடபத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சந்தனப்பெட்டியின் சிறப்புகள்:


நரேந்திர மோடி வெளிநாடு பயணங்களின்போது அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் பரிசு சிறப்பு வாய்ந்ததாகவும் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் என்பது வழக்கம். அப்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வழங்கிய சந்தனப்பெட்டியில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து சிறப்புமிக்க பொருளை வழங்கினார். 


சந்தனத்தால் செய்யப்பட்ட பெட்டியில், சின்ன டப்பாக்களில் பத்து பொருட்கள் இருந்தன. இந்த சந்தனப்பெட்டி ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் கைவினைப் பொருட்கள் செய்பவரிடமிருந்து பெற்றதாகும். சந்தன மரம் கர்நாடக மாநிலத்தில் இருந்து பெறப்பட்டதாகும். 




சிறிய அளவிலான வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்கு, காப்பர் தட்டு, அதோடு பத்து வெள்ளி சிறிய டப்பாக்கள் (das danam symbol) இருந்தன. வெள்ளி விநாயகர் சிலை கொல்கத்தாவில் ஐந்து தலைமுறைகளாக நகை தயாரிக்கும் தொழில் செய்து வரும் குடும்பத்திடமிருந்து பெறப்பட்டது. வெள்ளி விளக்கும் இவர்களிடமிருந்து பெற்றதாகும். உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தாம்பர தட்டு, அதில் ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கும். 


மரியாதை நிமித்தமாக வழங்கப்படும் வெள்ளி தேங்காய் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்து சிறிய சந்தனக்கட்டை, தமிழ்நாட்டிலிருந்து எள், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 24 காரட் தங்க நாணயம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து நெய், ஜார்காண்ட்-லிருந்து பட்டு துணி, உத்தரகாண்ட்- அரிசி, மகாராஷ்டிராவில் இருந்து வெல்லம், வெள்ளி நாணயம், குஜராத் மாநிலத்தில் இருந்து உப்பு ஆகியவை இந்த சந்தனப்பெட்டியில் இடம்பெற்றிருந்தன. 


‘The Ten Principal Upanishads’ என்ற வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய புத்தகம் ஒன்றையும் அவர் பரிசளித்தார்.


ஜோ பைடன் பரிசு


பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாரம்பரியமும் பழமையும் மிக்க பொருட்களை ஜோ பைடன் பரிசளித்துள்ளார். வின்டேஜ் கேமரா, ஜார்ஜ் ஈஸ்ட்மேன் பேட்டண்ட் பெற்ற கோடாக் கேமரா (George Eastman’s Patent of the first Kodak camera), அமெரிக்கன் வைல்டுலைஃப் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம், புகழ்பெற்ற கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு புத்தகம் ஆகியவற்றை பரிசளித்துள்ளார்.