இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ளது டெல்அவிவ் நகரம். இந்த நகரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கர்மியோசேப். இந்த நகரத்தில் வசித்து வரும் இளம் தம்பதியினர் தங்களது வீட்டில் ப்ரைவேட் பார்ட்டி எனப்படும் கேளிக்கை கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியில், தம்பதியினர் அழைப்பை ஏற்று 60 பேர் பங்கேற்றனர். அப்போது, அந்த தம்பதியினர் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் அனைவரும் உற்சாகமாக ஆனந்த குளியல் குளித்துக் கொண்டிருந்தனர். சிலர், நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்க சிலர் நீச்சல் குளத்தின் பக்கவாட்டுச் சுவற்றில் அமர்ந்திருந்தனர்.




இந்த நிலையில்தான், நீச்சல்குளத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றும் தொட்டியின் குழாய் எதிர்பாராத வகையில் திடீரென உடைந்தது. இந்த எதிர்பாராத விபத்தால் நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்நோக்கி இழுக்கப்பட்டது.






இதில், நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள் ஹூப்ரு மொழியில் அலறினர். ஆனாலும், நீர் உள்ளிழுக்கப்பட்ட வேகத்திற்கு அந்த இளைஞர் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற இன்னொரு நபர் முயன்றும் அவரால் அந்த இளைஞரை காப்பாற்ற முடியவில்லை.




நீச்சல் குளத்திற்கு கீழே இருந்த தொட்டிக்குள் அவர் மூழ்கியதாலும், நீச்சல் குளத்தில் இருந்த விளையாட்டு பொருட்கள் அனைத்தும் அந்த நபரை போட்டு மூழ்கடித்தாலும் அவர் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண