மேலும் அறிய

ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்

Flight Accident: தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் வெடித்து சிதறிய கோர விபத்து டொமினிகன் குடியரசில் அரங்கேறியுள்ளது.

Flight Accident: டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெடித்து சிதறிய விமானம்:

டொமினிகன் குடியரசின் லா ரொமானா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.  விபத்தின் போது விமானத்தில் வேறு எந்த பயணிகளும் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..  டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் அறிக்கையின்படி, லா ரொமானாவிற்கு தென்மேற்கே சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானம் அவசரநிலையை அறிவித்து, விமான நிலையத்திற்குத் திரும்ப முயன்றபோது கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் விபத்து வீடியோ:

விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அதில் விமான நிலையத்திலிருந்து பெரும் புகை மண்டலம் எழுவதும், தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதும் காணப்பட்டன. விமானப் போக்குவரத்து ஆணையத்தின்படி, கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200 ரக விமானம் சம்பந்தப்பட்ட விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான வீடியோவின்படி, அவசர கதியில் தரையிறக்கப்பட்ட விமானமாது, ஓடுபாதையில் பயணிக்கும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள புல்வெளியில் சரிந்துள்ளது. தாறுமாறாக சறுக்கிச் சென்று மேலே உயர்ந்து மீண்டும் ஓடுபாதைக்குள் திரும்பும்போது, விமானத்தின் அடிப்பகுதி தரையுடன் பயங்கரமாக மோதி, தீ விபத்து ஏற்பட்டு விமானம் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகையுடன் பயங்கர தீப்பிழம்புகள் எழுந்துள்ளது.

தொடரும் விபத்துகள்:

1.16 கோடி மக்கள் வசிக்கும் டொமினிகன் குடியரசின் சுற்றுலாத்துறை அந்நாட்டு பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் தூணாக விளங்குகிறது. லா ரொமானா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள சுற்றுலாத் தலமான லா ரொமானாவிற்கான இணைப்புச் சேவையை வழங்குகிறது. 2021-ஆம் ஆண்டில் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி ஒன்பது பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Embed widget