நியோண்டர்தால் மரபுக்குறியீட்டை கண்டறிந்தது உள்ளிட்ட மருத்துவ துறையின் மகத்தான ஆராய்ச்சிகளை கண்டறிந்த ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவிற்கு உலகின் மிகவும் புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


2022ம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்கான நோபல் பரிசு வென்ற ஸ்வாந்தே பாபோவிற்கு உலகெங்கும் உள்ள மருத்துவத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நோபல் பரிசு வென்ற ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவிற்கு அவரது நண்பர்கள் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






அதாவது, அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்வாந்தோ பாபோவை கட்டிடங்கள் அருகே உள்ள நீர்நிலை ஒன்றில் தூக்கி வீசுகின்றனர். அதில் உற்சாகத்துடன் குதித்த ஸ்வான்டே பாபோ ஆனந்தமாக அந்த நீர்நிலையில் உற்சாகமாக நீந்துகிறார். இதைப் பார்த்த அங்கிருந்த அவரது நண்பர்கள் உற்சாகம் அடைகின்றனர்.


இந்த நிலையில், இந்த வீடியோவை நோபல் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மருத்துவத்திற்கான எங்களின் புதிய பரிசைப் பெற்ற ஸ்வான்டே பாபோவை அவரது சக பணியாளர்கள் குளத்தில் வீசினர். பொதுவாக ஒரு ஊழியர் பி.எச்.டி. பெறும்போது அவரை குளத்தில் வீசுவது நடக்கும். இங்கு பாபோ நோபல் பரிசு பெற்றதற்காக இதைச் செய்துள்ளனர்.” இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.




ஸ்வான்டே பாபோ நியான்டர்தால் குறித்த ஆராய்ச்சி, ஆதிமனிதர்களின் ஒரு வகையான டெனிசொவன்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை கண்டறிந்துள்ளார். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்கு இவரது ஆராய்ச்சி பெரிதளவில் உதவுகிறது.


மேலும் படிக்க : உக்ரைனுக்கு எதிராக ரகசிய வாக்கெடுப்பு கோரிய ரஷ்யா… எதிர்ப்பு தெரிவித்த இந்தியா! நிராகரித்த ஐ.நா.


மேலும் படிக்க : 15 நிமிடமே பயணம்.. 6 கிமீ தான்... கட்டணமாக 32 லட்சம் பில் போட்ட உபர்.. அதிர்ச்சியில் உறைந்த பயணி!