'இந்தியன் க்ரீப் கோ' எனப்படும் அமெரிக்க உணவகத்தின் மெனுவில் பழைய தென்னிந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. "டங்க்டு டோனட் டிலைட்", "டங்க்ட் ரைஸ் கேக் டிலைட்", "நேக்கட் க்ரீப்", "ஸ்மாஷ்ஷ்ட் பொட்டாடோ க்ரீப்" போன்றவை காலை உணவாக வழங்கப்பட்டு வருகிறது. 


 






கேட்பதற்கு புதிதாக தெரிகிறதே தென்னிந்திய உணவு வகை என சொல்கிறீர்களே என உங்களுக்கு சந்தேகம் எழலாம். இதில், பெயர் மட்டும்தான் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தும் நமக்கு வழக்கப்பட்ட உணவு வகைதான். மெது வடை, சாம்பார் இட்லி, சாதா தோசை, மசாலா தோசை ஆகியவற்றின் பெயர் மாற்றப்பட்டு விற்கபடுகிறது. 


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த உணவு பொருள்கள் அனைத்து அதிகமான விலைக்கு விற்கபடுகிறது. "நொறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு க்ரீப்" $18.69 க்கும் (ரூ. 1,491), "நேக்கட் க்ரீப்" $17.59க்கும் (ரூ. 1,404), "டங்க்ட் டோனட் டிலைட்" $16.49க்கும் (ரூ. 1,316) "டங்க்ட் ரைஸ் கேக் டிலைட்" $15.39 (ரூ. 1,228)க்கும் விற்கப்படுகிறது. உணவு பொருள்களின் விலை அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.


எனவே, பெயரில் மட்டும்தான் டிலைட் உள்ளதே தவிர வாடிக்கையாளர்கள் யாரும் டிலைட்டாக இல்லை என்றே சொல்லலாம்.


உணவு வகைகள் தீவிரமாக அரசியலாக்கப்பட்ட நிலையில், உணவின் பெயரை மாற்றி விற்பது கலாசார ரீதியாக பிரச்னைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தியர்கள் தங்கள் உணவை இலகுவாக எடுத்துக்கொள்வதில்லை. @inika_ என்ற பயனாளர் இதை ட்விட்டரில் பகிர்ந்த பிறகு, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தென்னிந்திய உணவான தோசை, சமீப காலமாகவே பல்வேறு முறைகளில் சமைக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சீஸில் ஊற்றப்பட்டு சமைக்கப்படுவிதிலிருந்து ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டு சமைக்கப்படுவது வரை பல வகைகளாக இவை விற்கபடுகிறது. ரொட்டியைப் போலவே இதை பலரும் கலாச்சார ஊடுருவல் என்றே கருதுகின்றனர்.


பரிச்சயம் இல்லாத வெளிநாட்டவர், இதை "அப்பம்" என்றும் "ரொட்டி" என்றும் "க்ரீப்" என பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண