Plane Crash: ஓ மை காட்..! நடுரோட்டில் சரிந்து பல கார்களை முட்டி மோதிய விமானம் - பரபரப்பான வீடியோ வைரல்
US Plane Crash: அமெரிக்காவின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தரையிறங்கி, பல கார்கள் மீது முட்டி மோதியுள்ளது.

US Plane Crash: அமெரிக்காவின் பயிற்சி விமானம் ஒன்று பல கார்கள் மீது முட்டி மோதிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாலையில் தரையிறங்கிய விமானம்:
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் போக்குவரத்து நிறைந்த பரபரப்பான சாலையில், பயிற்சி விமான ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து பல கார்களை முட்டி மோதி சேதப்படுத்தியது. பயிற்சியை முடித்துவிட்டு, விமான நிலையத்திற்குத் திரும்புவதற்கு போதுமான சக்தி இல்லாததால், கெய்ன்ஸ்வில்லில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் ஒற்றை இன்ஜின் கொண்ட பயிற்சி விமானத்தை விமானி தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்களை முட்டி மோதிய விமானம்:
விமானம் அவசரகதியில் தரையிறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், சாலைகள் அணிவகுத்து நிறுகும் சாலையில் சட்டென தரையிறங்கிய விமானம் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடி, சாலையில் மையத்தில் இருந்த பிரிப்பான்கள் மீது மோதியது. தொடர்ந்து வலதுபுறமாக நின்றிருந்த பல கார்கள் மீதும் அடுத்தடுத்து முட்டி மோதி நின்றுள்ளது. விமான மோதிய வேகத்தில் பல கார்களும் கடுமையாக சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக வஉயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து குறிப்பிட்ட சாலை மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
#BREAKING : Video shows the moments a small plane on a training flight made an emergency crash landing on a busy street in Gainesville, Georgia.#Georgia #Gainesville #emergency #crash #landing #Plane #street pic.twitter.com/4XfzFDVFip
— mishikasingh (@mishika_singh) February 10, 2026
விபத்துக்கான காரணம் என்ன?
கெய்ன்ஸ்வில்லின் லீ கில்மர் நினைவு விமான நிலையத்திலிருந்து கேன்டனில் உள்ள செரோகி கவுண்டி பிராந்திய விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விளக்கமளித்துள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏதோ சிக்கல் இருப்பதை விமானி உணர்ந்துள்ளார். உடனடியாக தரையிறங்குவதற்காக மீண்டும் கெய்ன்ஸ்வில்லே நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், விமானம் விமான நிலையத்தை அடைய போதுமான சக்தி இல்லாததால், உடனடியாக எமர்ஜென்சி லேண்டிங் செய்து சாலையிலேயே தரையிறக்கியுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஹாக்கர் பீச்கிராஃப்ட் BE-36 விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக விமானியால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது உள்ளூர் நேரப்படி மதியம் 12:10 மணியளவில் நடைபெற்றதாக” ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாரமதியில் இத்தகைய சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, மகாராஷ்டிரா துணைமுதலமைச்சர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
























