US Iran War: அப்போ, ஈரான் மேல அட்டாக் கன்ஃபார்ம் தானா.? ஏஐ புகைப்படம் மூலம் மிரட்டிய ட்ரம்ப்
Trump Vs Iran: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, போர் விமானத்தில் குண்டு பொருத்தப்பட்டிருப்பது போன்ற பகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ட்ரம்ப்.

ஈரானை அச்சுறுத்தும் விதமாக புகைப்படத்தை பகிர்ந்த ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் குறித்த பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு போர் விமானத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதை காட்டும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ஈரானை அச்சுறுத்தியுள்ளார். அந்த படத்தில், "இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ட்ரம்பின் இந்த பதிவு வெளியாகியுள்ளது. இதனிடையே, டெல்லியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எந்த நேரத்திலும் ஒரு நல்ல செய்தி வரக்கூடும் என்று கூறியுள்ளார். இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த எந்த திட்டங்களையோ அல்லது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்தோ அமெரிக்க அதிபர் இன்னும் அறிவிக்கவில்லை.
“ஒபாமாவைப் போல் நான் மோசமான ஒப்பந்தங்களை செய்வதில்லை“
இதற்கு சற்று முன்னதாக, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் போட்ட பதிவில், "நான் ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அது ஒபாமாவின் ஒப்பந்தத்தைப் போல இல்லாமல், நல்லதாகவும் நியாயமானதாகவும் இருக்கும். ஒபாமாவின் ஒப்பந்தம் ஈரானுக்கு பெருமளவு பணத்தை கொடுத்து, அணு ஆயுத மேம்பாட்டிற்கு வழியை திறந்துவிட்டது. எங்கள் ஒப்பந்தம் இதற்கு முற்றிலும் நேர்மாறானது, ஆனால் அதை யாரும் பார்த்ததில்லை, அது என்னவென்றும் யாருக்கும் தெரியாது. அது இன்னும் முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தப்படக்கூட இல்லை. ஆகவே, தங்களுக்கு ஒன்றும் தெரியாத ஒரு விஷயத்தை விமர்சிக்கும் அந்த தோல்வியாளர்களின் பேச்சை கேட்காதீர்கள்," என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்னையைத் தீர்த்திருக்க வேண்டிய எனக்கு முன்னிருந்தவர்களை போலல்லாமல், நான் மோசமான சமரசங்களை செய்துகொள்வதில்லை!" என்று அவர் கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - ஈரானிய அதிகாரிகள்
அமெரிக்கா, ஈரான் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்டுள்ளது. ஆனால், அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்தார். ஆனால் தற்போது, ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறி, அமெரிக்க அதிபர் தனது முந்தைய கருத்துடன் முரண்பட்டுள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் முட்டுக்கட்டையாக உள்ளது என்ன.?
ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, எட்டப்பட்டதாக கூறப்படும் அந்த ஒப்பந்தத்தில், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு செயல்திட்டம் இடம்பெற்றிருந்ததாகவும், பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிய சொத்துக்களின் முடக்கத்தை நீக்கும் செயல்முறை மற்றும் லெபனானில் போர் நிறுத்தம் ஆகிய ஒப்பந்தத்தின் இரண்டு முக்கிய விஷயங்களில் அமெரிக்கா பின்வாங்குவதற்கான அறிகுறிகளை காட்டுவதாக, அல் ஜசீரா தனது ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகியவையும் முக்கிய சர்ச்சைக்குரிய விஷயங்களாக தெரிகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ட்ரம்ப்பின் பதிவு, மீண்டும் போர் தொடங்குவதற்கான ஒரு அறிகுறியாக இருப்பதால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















