மேலும் அறிய

Trump Vs Iran Hormuz: ஹார்முஸ் பிரச்னை ஓய்ந்தது.? ‘ப்ராஜெட் ஃப்ரீடம்‘ திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ட்ரம்ப்; காரணம் என்ன.?

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்களை விடுவிப்பதற்காக தொடங்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' திட்டத்தை நிறுத்தி வைத்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய கிழக்கின் மிகவும் பரபரப்பான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், அமெரிக்கா எடுத்த ஒரு முடிவு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று வரை ஈரானை அழித்துவிடுவதாக அச்சுறுத்தி வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது லட்சியமிக்க 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' (Project Freedom) என்ற திட்டத்தை திடீரென நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். உலகெங்கிலும் சிக்கித் தவிக்கும் கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பெரும் வாக்குறுதிகளுடன் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. ட்ரம்பின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே ஒரு சமாதான முன்னெடுப்பா அல்லது கடலில் மறைந்திருக்கும் ஒரு பெரும் ஆபத்தின் அறிகுறியா.?

3 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்'

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பால் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்', வெறும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை விடுவித்து, அவற்றுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், வெள்ளை மாளிகையின் இந்த திடீர் முடிவு, அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் - ட்ரம்ப்

இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் போது அடைந்த மகத்தான வெற்றியின் அடிப்படையிலும், ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு விஷயத்தில் பரஸ்பர உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து முழு வீச்சில் அமலில் இருக்கும் அதே சமயம், ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா இல்லையா என்பதை பார்ப்பதற்காக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை பாதுகாப்பாக இயக்குவதற்கான ‘ப்ராஜெக்ட் ஃப்ரீடம்‘ திட்டத்தை குறுகிய காலத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இனி ஹார்முஸில் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக இருக்குமா.?

ட்ரம்ப் இப்படி கூறினாலும், அவ்வழியாக செல்லும் கப்பல்களுக்கான பிரச்னைகள் தீராது. ஏனென்றால், கப்பல்கள் கடந்து செல்வதற்காக, ஈரான் புதிய மற்றும் கடுமையான முன்-அனுமதி விதிகளை அமல்படுத்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு முறையான மற்றும் எழுத்துப்பூர்வமான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, எந்தவொரு வர்த்தகக் கப்பலும் அந்தப் பகுதி வழியாகச் செல்வது அபாயகரமானதாகவே இருக்கும்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகையும் தொடர்கிறது

இதேபோல், அமெரிக்கா 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், தனது ராணுவப் பிடியை தளர்த்தவில்லை. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை தொடர்கிறது. ஈரான் தனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறதா என்பதை தாங்கள் கண்காணிப்போம் என்று அமெரிக்கா கூறுகிறது.

இதற்கிடையே, தனது கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்கக் கடற்படை இருப்பது போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று ஈரான் தெளிவாக எச்சரித்துள்ளது. கடலில் வெடிமருந்தின் வாசனை இன்னும் நீடிக்கிறது என்பதே நிதர்சனமாக உண்மை.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
US Iran War Pakistan: பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
US Iran War Pakistan: பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
Embed widget