US-Israel-Iran War: ஹார்மஸ் திறக்கவே முடியாது..! அப்படிக்கா போங்க - கப்பல்களுக்கு புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்
US-Israel-Iran War: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து மூடப்பட்ட ஹார்மஸ் நீர்வழிப்பாதையை திறக்க முடியாது என, மாற்று வழியை ஈரான் அறிவித்துள்ளது.

US-Israel-Iran War: ஹார்மஸ் நீர்வழிப்பாதைக்கு மாற்றாக ஈரான் பரிந்துரைக்கும் வழியின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹார்மஸ் வழியாக வருவது ஆபத்து - ஈரான்
முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்மஸ் நீரிணை பகுதியில் உள்ள கடல் கண்ணி வெடிகளை கருத்தில் கொண்டு, கப்பல்களுக்கான மாற்று வழியை பயன்படுத்தும்படி ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா உடனான நிலையற்ற இரண்டு கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றதன் விளைவாக, தற்காலிகமாக ஹார்மஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இந்நிலையில் தான் மாற்று வழிப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஈரான் கொடுக்கும் வார்னிங் என்ன?
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆவணத்தில், “ கடல்சார் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், கடல் கண்ணிவெடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஹார்மஸ் நீரிணையை கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும், நீர்வழிப்பாதையில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய மாற்றுப்பாதைகளை ஈரான் அறிவித்துள்ளது.
கப்பல்களுக்கான அட்வைஸ், மாற்று வழித்தடங்கள் என்ன?
நீர்வழிப்பாதையை கடக்க முயலும்போது கப்பல்கள் தங்கள் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது. மாற்று வழித்தடங்களாக முன்மொழிவின்படி, “கப்பல்கள் ஓமான் கடலில் இருந்து லராக் தீவின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்து, பின்னர் வளைகுடாவிற்குள் தொடர்ந்து பயணித்து, லராக் தீவின் தெற்கே கடந்து ஓமான் கடலை நோக்கிச் செல்வதன் மூலம் வளைகுடாவிலிருந்து வெளியேறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்மஸ் மீண்டும் மூடப்பட்டது ஏன்?
அமெரிக்கா உடனான இரண்டு வார போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்மஸ் நீரிணையை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதற்கு பதிலடி தரும் விதமாக, ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மூடிவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதோடு, வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் மீதான தாக்குதல் இடம்பெறவில்லை எனவும், ஹார்மஸை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா சொன்னாலும் ஈரான் அதை கேட்பதாக இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் இந்த நீரிணை ஒரு முக்கிய அழுத்தப் புள்ளியாகத் உருவெடுத்துள்ளது. இதன் மீதான தனது கட்டுப்பாட்டை ஒரு பேச்சுவார்த்தைக்கான சக்தியாக ஈரான் பயன்படுத்தி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























