மத்திய கிழக்கு மீண்டும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு பெரிய தாக்குதல் இன்னும் வரவிருக்கிறது என்று கூறி, டெஹ்ரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
Trump Warns Iran: “நியாயமான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தினா, சாத்தி எடுத்துடுவேன்“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஸ்ரீராம் ஆராவமுதன் | 02 Sep 2026 03:18 PM (IST)
பிராந்தியத்தில் அமெரிக்கா செய்யும் எந்தவொரு தவறான செயலுக்கும் பெரும் இழப்புகளை சந்திக்கும் என்று ஈரான் ராணுவம் கூறியுள்ளது. மறுபுறம், ஈரான் மீண்டும் தாக்கினால், அதைவிட வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை