மேலும் அறிய

Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் குறித்து கருத்து தெரிவித்த கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ம் லியோவை கடுமையாக சாடிய ட்ரம்ப், தன்னை ஏசு போல் சித்தரித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரினால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது எந்நேரமும் மீண்டும் தொடங்கலாம் என்ற வகையிலேயே தற்போதைய நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கின்ற. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், இந்த போர் குறித்து கருத்து தெரிவித்த, கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14-ம் லியோ மீது பாய்ந்து, கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அது மட்டுமல்லாமல், தன்னை ஏசு போர் சித்தரித்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

போப்பை விமர்சித்து ட்ரம்ப் போட்ட பதிவு என்ன.?

தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் போப் 14-ம் லியோ குறித்து விமர்சனம் செய்து பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “போப் லியோ குற்ற விஷயத்தில் பலவீனமானவர். வெளியுறவுக் கொள்கையில் படுமோசமானவர். அவர் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான "பயம்" பற்றிப் பேசுகிறார். ஆனால், கோவிட் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையும் மற்ற அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளும் கொண்டிருந்த பயத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அப்போது, ​​தேவாலய ஆராதனைகளை நடத்தியதற்காக, வெளியே சென்று பத்து, இருபது அடி இடைவெளியில் நின்றதற்காகக் கூட, பாதிரியார்கள், மதகுருக்கள் மற்றும் அனைவரையும் அவர்கள் கைது செய்தனர். அவரை விட அவருடைய சகோதரர் லூயிஸை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், லூயிஸ் முழுக்க முழுக்க MAGA ஆதரவாளர். அவருக்கு விஷயம் புரிகிறது. ஆனால் லியோவுக்குப் புரியவில்லை!“ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். அமெரிக்காவிற்குள் பெருமளவு போதைப் பொருட்களை அனுப்பிக்கொண்டிருந்த, அதைவிட மோசமாக, கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கொலையாளிகள் உட்பட தங்கள் சிறைகளில் இருந்தவர்களை நம் நாட்டிற்குள் அனுப்பிக்கொண்டிருந்த வெனிசுலாவை அமெரிக்கா தாக்கியது ஒரு பயங்கரமான விஷயம் என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். மேலும், அமெரிக்க ஜனாதிபதியை விமர்சிக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். ஏனென்றால், நான் எதற்காகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, அதைத்தான் சரியாக செய்து கொண்டிருக்கிறேன்: குற்றங்களின் எண்ணிக்கையை வரலாறு காணாத அளவிற்கு குறைத்து, வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்குச் சந்தையை உருவாக்குகிறேன்.“ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதோடு, “லியோ நன்றியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அனைவருக்கும் தெரிந்தபடி, அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமாக இருந்தார். போப் ஆவதற்கான எந்த பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. அவர் ஒரு அமெரிக்கர் என்பதாலும், அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்பை கையாள்வதற்கு அதுவே சிறந்த வழியாக இருக்கும் என்று திருச்சபை நினைத்ததாலும் மட்டுமே அவரை அந்த பதவியில் அமர்த்தியது. நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வாட்டிகனில் இருந்திருக்க மாட்டார். துரதிர்ஷ்டவசமாக, குற்ற விஷயத்தில் லியோவின் பலவீனமான நிலைப்பாடும், அணு ஆயுதங்கள் விஷயத்தில் அவரது பலவீனமான நிலைப்பாடும் எனக்கு ஏற்புடையதாக இல்லை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதுபோலவே, தேவாலயத்திற்குச் செல்பவர்களையும் மதகுருமார்களையும் கைது செய்ய விரும்பியவர்களில் ஒருவரான, இடதுசாரியைச் சேர்ந்த ஒரு தோல்வியாளரான டேவிட் ஆக்சல்ராட் போன்ற ஒபாமா ஆதரவாளர்களை அவர் சந்திப்பதும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. போப்பாக லியோ தன் செயல்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். பொது அறிவை பயன்படுத்த வேண்டும். தீவிர இடதுசாரிகளுக்கு சேவை செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப்பாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது அவரை மிகவும் மோசமாகப் பாதிக்கிறது. மேலும், முக்கியமாக, இது கத்தோலிக்கத் திருச்சபையையும் பாதிக்கிறது.!“ என்று ட்ரம்ப் தனது பதிவில் போப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், தான் ஏசுவாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தையும் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போப் என்ன கூறினார்.?

முன்னதாக, வாடிகனில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய போப் லியோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்தார். போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும், நம்பிக்கை அனைவரையும் இணைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தற்பெருமை, பணம் போதும், வலிமையை வெளிக்காட்டியதும் போதும், உண்மையான வலிமை வாழ்க்கையில் சேவை செய்வதில் வெளிப்படும். முட்டாள் தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வர வேண்டும். போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம். மேஜையில் அமர்ந்துகொண்டு ஆயுதம், மரணங்களக்கு திட்டமிடாமல், பேச்சுவாத்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள்“ என்று போர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா.. வருகை தந்த முக்கிய பிரபலங்கள்.. யார்,யார் தெரியுமா?
LIVE: விஜய் பதவியேற்பு விழா.. வருகை தந்த முக்கிய பிரபலங்கள்.. யார்,யார் தெரியுமா?
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
TN Cabinet Ministers: தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா.. வருகை தந்த முக்கிய பிரபலங்கள்.. யார்,யார் தெரியுமா?
LIVE: விஜய் பதவியேற்பு விழா.. வருகை தந்த முக்கிய பிரபலங்கள்.. யார்,யார் தெரியுமா?
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
TK Prabhu TVK: ரீல்ஸ் டாக்டர் டூ அமைச்சர்.. காரைக்குடி MLAவுக்கு ஜாக்பாட்.. யார் இந்த டி.கே.பிரபு?
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
Trisha: முதல் வரிசையில் இருக்கை.. விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷாவுக்கு ராஜ மரியாதை!
TN Cabinet Ministers: தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
தமிழக அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்பு.! அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட ஆளுநர் மாளிகை
TVK Keerthana: தவெகவின் இளம் MLA.. அமைச்சராக பொறுப்பேற்கும் சிவகாசி கீர்த்தனா.. யார் தெரியுமா?
TVK Keerthana: தவெகவின் இளம் MLA.. அமைச்சராக பொறுப்பேற்கும் சிவகாசி கீர்த்தனா.. யார் தெரியுமா?
Mahindra Hybdrid: நானும் களத்துக்கு வரேன்..! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா - டாப் மைலேஜ்
நானும் களத்துக்கு வரேன்..! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா - டாப் மைலேஜ்
Vijay CM Oath: தேய்பிறை அஷ்டமியில் விஜய் பதவியேற்பு.. நல்லதா? கெட்டதா?
Vijay CM Oath: தேய்பிறை அஷ்டமியில் விஜய் பதவியேற்பு.. நல்லதா? கெட்டதா?
ADMK: அதிமுக உடைகிறதா? இன்று மா.செ., கூட்டம், ஈபிஎஸ் பதவி தப்புமா? விஜய்க்கான பேக்கப் ரெடியாகிறதா?
ADMK: அதிமுக உடைகிறதா? இன்று மா.செ., கூட்டம், ஈபிஎஸ் பதவி தப்புமா? விஜய்க்கான பேக்கப் ரெடியாகிறதா?
Embed widget