US Attack ISIS-K LIVE Updates: காபூலில் மேலும் ஒரு தாக்குதல் நடக்கலாம் - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

US Attack ISIS-K LIVE Updates: காபூலில் ஐஎஸ்ஐஎஸ்., அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா தற்போது தன்னுடைய பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. அது தொடர்பான லைவ் அப்டேட்ஸ் இதோ...

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 29 Aug 2021 10:59 AM
Kabul Attack: காபூலில் மேலும் ஒரு தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன் எச்சரிக்கை

இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்த காபூல் விமான நிலையத்தில் மேலும் ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விமான நிலையத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். அமைப்பின் மீது அமெரிக்கப் படை ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

US Drone Attack on ISIS-K: குறி வைத்தவர் கொல்லப்பட்டார்: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தாக்குதலின் நோக்கம் நிறைவேறியதாகவும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்ட அந்த நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. 

காபூல் வெளியேற்றம்: பிரான்ஸ் அறிவிப்பு
காபூலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை முடிந்ததாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது
US Attack on ISIS-K: அமெரிக்க தாக்குதலில் 2 ஐஎஸ்ஐஎஸ்., தீவிரவாதிகள் பலி!

அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் வாகனத்தில் சென்ற இரு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இறந்தநபர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

US Attack on ISIS-K: ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்!

தற்போது அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் தாக்குதல், பாக்கிஸ்தான் எல்லையில் என்பதால், எங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. 

நங்கர்ஹார் மாகாணத்தில் தாக்குதல்!
காபூலுக்கு கிழக்கே மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது

 

ஐ.எஸ். அமைப்பின் தலைவரைக் கொல்ல அமெரிக்கா திட்டம்!

ஐ.எஸ். ஐ.எஸ்., கொரோசான் அமைப்பின் தலைவரைக் கொல்லவே அமெரிக்கப் படையின் இந்த ட்ரோன் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க நாட்டு மக்கள் வெளியேற உத்தரவு

அமெரிக்க ராணுவத்தை தொடர்ந்து அமெரிக்க நாட்டு மக்களையும் காபூர் விமான நிலைய முகப்பிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு

ஆக.26ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடி

ஆகஸ்ட் 26 ம் தேதி காபூலில் ஐஎஸ்ஐஎஸ் கோரசான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதத்தில் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. 

விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற உத்தரவு!

காபூல் ஐஎஸ்ஐஎஸ் கோரசான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் துவங்கியுள்ள நிலையில் காபூல் விமான நிலைய நுழைவு வாயிலில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் வெளியேற அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. 

ஐஎஸ்ஐஎஸ் கோரசான் பயங்கரவாதிகளை குறி வைத்து தாக்குதல்

அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் கோரசான் பயங்கரவாதிகளை குறி வைத்து தற்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. 

13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

காபூலில் ஐஎஸ்ஐஎஸ் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னிக்கமாட்டோம் என கூறியிருந்த பைடன்

ஆப்கானில் காபூலில் ஐஎஸ்ஐஎஸ்., நடத்திய தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த சம்பவத்தை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என தெரிவித்திருந்தார் . இந்நிலையில் தான் இன்று பதில் தாக்குதல் தொடங்கியுள்ளது. 

180 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

காபூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 180 ஆக அதிகரித்துள்ளது. 

Background

US Drone Attack on ISIS-K


காபூல் விமான நிலைய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் மீது ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., தாக்குதலை தாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்த நிலையில் தற்போது இந்தத் தாக்குதல் நடைபெற்று உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.