Russia-Ukraine War : எவ்வளவு மிரட்டினாலும் இங்கிருந்து வெளியேறமாட்டேன்... உக்ரைன் அதிபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

"என்னை அழிப்பதன் மூலம் உக்ரைனை அழிக்கலாம் என்று ரஷ்யா நினைக்கிறது" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Continues below advertisement

என்னை அழிப்பதற்காகவே ரஷ்யாவில் நாசவேலை குழுக்கள் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளது. என்னை அழிப்பதன் மூலம் உக்ரைனை அழிக்கலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. ரஷ்யா எப்படி மிரட்டினாலும் கீவ் நகரை விட்டு நான் செல்ல போவதில்லை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது. 

இந்தநிலையில், உக்ரைன் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

வியாழன் அன்று நடந்த தாக்குதலில் இருந்து ரஷ்யப் படைகள் மீது அதன் ஆயுதப் படைகள் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை அமைச்சகம் குறிப்பிடுகிறதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 30 க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola