மேலும் அறிய

Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?

ஈரான் விவகாரத்தில் நேட்டோ மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபத்தில் இருக்கும் இந்த நேரத்தில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள ஒரு விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன.? பார்க்கலாம்.

ஈரானுக்கு எதிரான போரில், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும் விஷயத்தில் தங்களுக்கு உதவுமாறு, நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், அவ்வாறு யாரும் செய்யாததால், ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ மீது கோபத்தில் உள்ளார் ட்ரம்ப். இந்த நேரத்தில், இனி அமெரிக்காவை நம்பாமல், ஐரோப்பா தங்களுக்கென ஒரு தனி ராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி

இது தொடர்பாக, பாட்கேஸ்ட் ஒன்றிற்கு அளித்த பேட்டி குறித்து  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உண்மையிலேயே நேட்டோவிலிருந்து விலக நினைத்தால், ஐரோப்பிய பாதுகாப்பு முற்றிலும் ஐரோப்பிய ஒன்றியத்தையே சார்ந்திருக்கும்.  ஆனால், அதன் தற்போதைய வடிவத்தில் அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இன்னும் பல நாடுகள் தேவைப்படும் ஒரு சூழ்நிலையில் இருப்பதாக தான் நினைப்பதாகவும், இங்கிலாந்து, உக்ரைன், துருக்கி மற்றும் நார்வே. இவை நான்கும் ஐரோப்பாவின் அங்கமான வலிமையான நாடுகள் என்றும் கூறியுள்ளார். அதோடு, இங்கிலாந்து, உக்ரைன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் படைகள் ஒன்றுசேர்ந்து, ரஷ்யாவின் படையை விட வலிமையானவை என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைன் மற்றும் துருக்கி இல்லாமல், ஐரோப்பாவால் ரஷ்யாவிற்கு ஈடாக எதிர்த்து நிற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்த நான்கு நாடுகளும் இணைந்தால், கடல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றலாம், வான்வெளியைப் பாதுகாக்கலாம் மற்றும் மிகப்பெரிய தரைப்படைகளை கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தாக்குதல் பற்றியது அல்ல, ஏனென்றால் 2030-க்குள் 2.5 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை உருவாக்க ரஷ்யா முடிவு செய்யும்போது, ​​ஐரோப்பா தனது பாதுகாப்பை பற்றியும், தனது சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் ஜெலன்ஸ்கி.

மேலும், இங்கிலாந்து ஒரு காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்தது என்றும், துருக்கியை பொறுத்தவரை, விவசாயம் குறித்து கவலைகள் உள்ளன எனவும், ஆனால், உங்களிடம்(ஐரோப்பிய ஒன்றியம்) உண்மையிலேயே ஒரு சிறந்த பொருளாதாரம் இருந்தால், இவை அனைத்தையும் நீங்கள் சமாளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், பாதுகாப்புக்குத்தான் முதல் இடம், பொருளாதாரத்திற்கு இரண்டாம் இடம். இதற்கு நேர்மாறாக அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார் ஜெலன்ஸ்கி.

ஈரான் போரில் உதவவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கோபமாக உள்ள இந்த நேரத்தில், ஜெலன்ஸ்கியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?
Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?
Trump Vs Iran Hormuz: ஹார்முஸ் பிரச்னை ஓய்ந்தது.? ‘ப்ராஜெட் ஃப்ரீடம்‘ திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ட்ரம்ப்; காரணம் என்ன.?
ஹார்முஸ் பிரச்னை ஓய்ந்தது.? ‘ப்ராஜெட் ஃப்ரீடம்‘ திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ட்ரம்ப்; காரணம் என்ன.?
Top 10 News Headlines: ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்
ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்
Hormuz-Indian LPG Tanker: வழிவிட்ட ஈரான்; தடுக்காத அமெரிக்கா; ஹார்முஸை கடந்து 45,000 டன் LPG உடன் இந்தியா வரும் கப்பல்
வழிவிட்ட ஈரான்; தடுக்காத அமெரிக்கா; ஹார்முஸை கடந்து 45,000 டன் LPG உடன் இந்தியா வரும் கப்பல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: “என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
“என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்“ திமுக MLA-க்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட பரபரப்பு
DMK AIADMK Alliance: தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
தலைமை முடிவெடுத்தால் திமுக - அதிமுக கூட்டணியை ஏற்போம்; டிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
MK Stalin Decision : ‘திமுக-அதிமுக கூட்டணி’ மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு – பின்னணியில் ரஜினி?
’திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி?’ பின்னணியில் ரஜினிகாந்த்..?
TN 12th Result 2026 Date: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
EPS Plan: சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
சொகுசு பங்களாவில் தங்கியுள்ள 30 அதிமுக எம்எல்ஏ-க்கள்; இபிஎஸ்-ன் வியூகமா.? வெளியான பரபரப்பு தகவல்
EPS TN Governor: இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்; மாலையில் நிகழப் போகும் அதிரடி திருப்பம் என்ன.? பரபரக்கும் அரசியல் களம்
இன்று ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்; மாலையில் நிகழப் போகும் அதிரடி திருப்பம் என்ன.? பரபரக்கும் அரசியல் களம்
TN Governor vs TVK : தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இது தான் முக்கிய காரணம்.! ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இது தான் முக்கிய காரணம்.! ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
TVK VCK: தவிக்கும் தவெக... விசிக ஆதரவா? கம்யூனிஸ்டுகள் கையில்.. திருமா பரபரப்பு பேட்டி!
TVK VCK: தவிக்கும் தவெக... விசிக ஆதரவா? கம்யூனிஸ்டுகள் கையில்.. திருமா பரபரப்பு பேட்டி!
Embed widget