2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காசியான்டெப் கோட்டை பூகம்பத்தின் போது இடிந்து விழுந்தது. மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியும் சிரியாவும் அடுத்தடுத்த மூன்று பயங்கரமான நிலநடுக்கங்களை எதிர்கொண்டுள்ளது. இதுவரை 2500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானதுடன், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. அவற்றில் 2,200 ஆண்டுகள் பழமையான காசியான்டெப் கோட்டை, கடுமையாக சேதமடைந்துள்ளது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.
"மத்திய ஷகிம்பி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசியான்டெப் கோட்டையின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள சில கோட்டைகள் நிலநடுக்கத்தால் சீர்குலைந்து போயுள்ளன.
“கோட்டையைச் சுற்றியுள்ள இரும்புத் தண்டவாளங்கள் சுற்றியுள்ள நடைபாதைகளில் சிதறிக் கிடந்தன. கோட்டையை ஒட்டி இருந்த தடுப்புச்சுவரும் இடிந்து விழுந்தது. கோட்டையின் எஞ்சிய பகுதிகளில், பெரிய விரிசல்கள் காணப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஷிர்வானி மசூதியின் குவிமாடம் மற்றும் கிழக்குச் சுவர் ஆகியவையும் ஓரளவு இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் படி, இந்த கோட்டை முதன்முதலில் கி.பி 2-4 ஆம் நூற்றாண்டில் ரோமானிய காலத்தில் ஒரு கண்காணிப்பு இடமாக கட்டப்பட்டது. மேலும் காலப்போக்கில் விரிவடைந்தது.
நாட்டின் அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான துருக்கிய அருங்காட்சியகங்களின் படி, பைசண்டைன் பேரரசர் ஜஸ்டினியன் I இன் காலத்தில் அதாவது, கி.பி 527-565 க்கு இடையில் தான் அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், கடலில் இருந்து அலைகள் சீறிப்பாய்ந்து வரும் விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.