தொடரும் நிலநடுக்கம்
காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுனாமி அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 20ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவ்வப்போது சுனாமி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜப்பான் நாட்டின் வட கடலோரப் பகுதிகளான ஹொக்காய்டோ, ஹொன்ஷு தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.
98 அடி உயர சுனாமி அலர்ட்
இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 90ஆயிரம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாத நிலையில், அலையின் சீற்றம் மட்டும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய அளவில் அதாவது 8 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக 98 அடி உயரத்திற்கு சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசு சார்பாக அலர்ட் விடுக்கப்பட்டிருந்த்து.
மீண்டும் நில நடுக்கம்- சுனாமி அலர்ட்
இந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல் இன்று ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.ஹோன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது குறைவான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடல்கரையோத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.