அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹமாஸ் தன்னுடைய அமைதித் திட்டத்தை ஒப்புக்கொண்டதாக கூறுவதற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அழைத்து பேசியுள்ளார். அப்போது, அதைப்பற்றி கொண்டாட எதுவும் இல்லை என கூறிய நெதன்யாகுவை, ட்ரம்ப் கெட்ட வார்த்தையில் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் என்ன கூறினார்.? பார்க்கலாம்.

Continues below advertisement

எதிர்மறையாக இருப்பதாகக் கூறி நெதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்

இஸ்ரேல்-காசா போரை நிறுத்துவதற்கான முக்கிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தை நேற்று எகிப்தில் உள்ள ரிசார்ட் நகராமான ஷர்ம் எல் ஷெய்க்கில் தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஹமாஸ், கத்தார், துருக்கி மற்றும் இன்னும் சில மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Continues below advertisement

இந்நிலையில், கடந்த வார இறுதியில், ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வெளியிட்டபோது, ஹமாஸ் அதில் சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது. இதை இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவிப்பதற்காக அவரை தொலைபேசி வாயிலாக அழைத்து, ஹமாஸ் தன்னுடைய திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதை மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆனால் அதற்கு வேறு விதமாக ரியான்ஷன் கொடுத்த நெதன்யாகு, இதில் கெண்டாட ஒன்றுமில்லை எனவும், இந்த முன்னேற்றங்கள் தனக்கு எதையும் குறிக்கவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடுப்பான ட்ரம்ப், "I don't know why you're always so f***ing negative“ என்று நெதன்யாகுவை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இது ஒரு வெற்றி, அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் நெதன்யாகுவிடம் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அதோடு, அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, ட்ரம்ப் பேசியபோது, ட்ரம்ப்பின் திட்டத்திற்கு ஹமாஸ் கொடுத்த பதிலை ஒரு நிராகரிப்பாக பார்ப்பதாக நெதன்யாகு ட்ரம்ப்பிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஹமாஸ் நேர்மறையாக பதிலளித்துள்ளதாக பரப்பப்படும் செய்திக்கு தக்க பதிலை அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பார்த்த ட்ரம்ப்

ஆனால், ட்ரம்ப் அதை வேறு விதமாக பார்த்துள்ளார். தன்னுடைய 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை முழுவதுமாக  ஹமாஸ் நிராகரிக்கவில்லை என்தால், எப்படியும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் கருதியுள்ளார்.

இதனால் தான், எதிர்மறையாக பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் ட்ரம்ப் கோபப்பட்டுள்ளார். இதன் மூலம், இஸ்ரேல்-காசா இடையேயான போரை நிறுத்துவதில் ட்ரம்ப் எந்த அளவிற்கு தீவிரம் காட்டுகிறார் என்பது தெரிகிறது. அதற்காக, நெதன்யாகுவை எப்படியும் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்றும் அவர் முயற்சித்து வருகிறார்.

நெதன்யாகு மீதான கோபத்தில் தான், அவரிடம் பேசிய சிறிது நேரத்திலேயே, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, 3 மணி நேரத்தில், நெதன்யாகு அதற்காக உத்தரவை பிறப்பித்தார்.