அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், பல ஆயுதங்களை வைத்திருந்தார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், அந்த அச்சுறுத்தலை கையாண்டதில் காட்டிய வீரத்திற்காக ரகசிய சேவைப் பிரிவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பின் பேசிய ட்ரம்ப் கூறியது என்ன.?
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துப்பாக்கிச் சூட்டாளர் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவரை "தனித்துச் செயல்படுபவர்" எனவும் ட்ரம்ப் விவரித்தார்,
சம்பவம் குறித்த விவரங்களை அளித்த ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தன்னைக் கொல்ல முயன்றவர் என்றும், ஆனால் புலனாய்வாளர்கள் அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருவதால், தற்போதைக்கு எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், அந்த அச்சுறுத்தலைக் கையாண்டதில் காட்டிய வீரத்திற்காகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுத்ததற்காகவும், ரகசிய சேவைப் பிரிவினருக்கு நன்றி என்றும் ட்ரம்ப் கூறினார். அந்தச் சந்தேக நபர் ஊடக விழாவில் ஒரு பாதுகாப்பு அதிகாரியையும் சுட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், "அவர் மிகவும் மனநோயாளியாக இருந்தார்," என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பற்றி ட்ரம்ப் கூறினார். "அந்த அறை மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அவர் 50 கெஜம் தொலைவிலிருந்து பாய்ந்து வந்தார். பாதுகாப்புப் படையினரின் எதிர்வினை நேரம் மிகவும் வேகமாக இருந்தது," என்றும் அவர் கூறினார்.
அதோடு, "ஒரு அதிகாரி சுடப்பட்டார், ஆனால் அவர் வெளிப்படையாகவே மிகவும் சிறந்த குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். இரவு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் ஆராய்ந்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அந்த சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட ட்ரம்ப், மற்றொரு பதிவில் வெளியிட்ட காணொயிளில், சந்தேக நபர் ஒரு பாதுகாப்பு தடுப்பை கடந்து ஓடுவதும், ரகசிய சேவை அதிகாரிகள் அவரை நோக்கி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
