மேலும் அறிய

Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க வர்த்தக நீதிமன்றம்; 10% உலகளாவிய வரி செல்லாது என அதிரடி தீர்ப்பு

Trump's Tariffs Cancelled: ஈரான் விவகாரத்தால் ஏற்கனவே ட்ரம்ப்பின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவரும் நிலையில், தற்போது அவருக்கு மேலும் ஒரு இடியை இறக்கியுள்ளது அமெரிக்க வர்த்தக நீதிமன்றம்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது, பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார். அது குறித்த வழக்குகள் ஏற்கனவே நடைபெற்று, அந்த வரிகள் சட்டவிரோதமானது என தீர்ப்புகள் வந்த நிலையில், தற்போது அமெரிக்க வர்த்தக நீதிமன்றமும் அதையே கூறியுள்ளதால், ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்த ட்ரம்ப்

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு அதரடியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். முக்கியமாக, குடியேற்றக் கொள்கைகளில் பெரிய அளவில் திருத்தங்களை அவர் மேற்கொண்டதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அதோடு, பல்வேறு உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்து, அமெரிக்காவிற்கு இணக்கமாக இல்லாத நாடுகள் மீது அதிக அளவில் வரிகளை விதித்தார். குறிப்பாக, கனடா, சீனா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.

அதற்காக காலக்கெடுவும் விதித்த அவர், பின்னர் அதனை தளர்த்தி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கு கால அவகாசம் வழங்கியதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில், சில நாடுகள் ஏற்கனவே ஒப்பந்தங்களை எட்டியுள்ளன.

ட்ரம்ப்பின் வரிகளுக்கு எதிராக வந்த தீர்ப்புகள்

இந்த நிலையில், ட்ரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராக, அமெரிக்காவின் சில மாகாணங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில், ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என மூன்று கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின.

இதையடுத்து, வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, வழக்கை விசாரணையில், வெளிநாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது.

வர்த்தக நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அவர் புதிதாக விதித்த 10 சதவீத உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், இதனை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த தீர்ப்பு, 2 மாதங்களில் காலாவதி ஆக இருக்கும் ஒரு தொகதி வரிகளுக்கே பொருந்தும் என்றாலும், உலகளாவிய சுங்க வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் எண்ணத்திற்கு இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Viral Video: நடுரோட்டில் துண்டுடன் ஆடிய இந்தியப் பெண்.. வியட்நாமில் பறிபோன மானம்.. டென்ஷனாகும் நெட்டிசன்கள்!
Viral Video: நடுரோட்டில் துண்டுடன் ஆடிய இந்தியப் பெண்.. வியட்நாமில் பறிபோன மானம்.. டென்ஷனாகும் நெட்டிசன்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget