Trump Vs Ukraine: உக்ரைன் கண்ணை கட்டி காட்டில் விட்ட ட்ரம்ப்.. முக்கியமான உதவி கட்.! இனி என்ன பண்ணப் போறாங்க.?

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த முக்கியமான உதவியை நிறுத்தியதால், உக்ரைன் இனி போர் புரிவதே கடினமாகிவிடும். அப்படி எந்த உதவியை ட்ரம்ப் நிறுத்தினார் தெரியுமா.?

Continues below advertisement

எந்த ஒரு நாடுமே, போர் புரியும்போது, அதில் முக்கிய பங்கு வகிப்பது, செயற்கைக்கோள் புகைப்படங்கள். அதை வைத்துதான், எதிரிகள் எங்கு உள்ளனர், அவர்களின் நடமாட்டங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும். தற்போது, உக்ரைனுக்கான செயற்கைக்கோள் புகைப்பட பகிர்வை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால், உக்ரைனுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகிவிடும்.

Continues below advertisement

ட்ரம்ப் மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக ஒரு குழுவை அமைத்து, இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், உக்ரைனுக்கு ஒரு செக் வைத்திருந்தார் ட்ரம்ப். அதாவது, ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பெரும் நிதியுதவிக்கு ஈடாக, உக்ரைனில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை கோரினார் ட்ரம்ப். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் உக்ரைனுக்கான உதவிகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்தார். ஆனாலும் அசராத உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்பின் நிபந்தனையை ஏற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

உக்ரைனுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் ட்ரம்ப்

சமாதான பேச்சுவாத்தைக்காக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது கூட, இருவருக்குமிடையே வார்த்தைப் போர் மூண்டு, உலகம் முழுவதிலும் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கான நிதி உதவிகள் மற்றும் தளவாட உதவிகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து, ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இந்நிலையில், போரை நிறுத்த உக்ரைன் விரும்பவில்லை என குற்றம்சாட்டி, அந்நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.

செயற்கைக்கோள் புகைப்பட பகிர்வை நிறுத்திய ட்ரம்ப்

இந்நிலையில், உக்ரைனுக்கு போரில் பெரும் உதவியாக இருக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்களை பகிர்வதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனென்றால், செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்துதான், ரஷ்ய படைகள் எங்கு உள்ளன, அவர்களின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன என்பதை உக்ரைன் கண்காணித்து வந்தது. இந்நிலையில், தற்போது அந்த உதவி நிறுத்தப்பட்டுள்ளதால், உக்ரைன் போர் புரிவதே மிகவும் கடினமாகிவிடும். ரஷ்ய படைகள் எப்போது எங்கிருந்து தாக்குவார்கள் என்பதே இனி அவர்களுக்கு தெரியாது. இதனால், போரில் உக்ரைன் தோற்கும் நிலை ஏற்படும்.

உக்ரைனுக்கான செயற்கைக்கோள் புகைப்பட பகிர்வு நிறுத்தப்படுவதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான் என தெரிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், உக்ரைனுக்கு இது பெரும் பின்னடைவுதான். இது மட்டுமல்லாமல், உக்ரைனுக்கு ராணுவ உதவி மற்றும் உளவுத்துறை உதவிகளையும் நிறுத்தியுள்ளது அமெரிக்கா.

அமைதிப் போச்சுவார்த்தையை நோக்கி உக்ரைனை நர்த்துவதற்காக ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில், உக்ரைனை சமாளிப்பதுதான் கடினமாக உள்ளதாகவும், ரஷ்யாவை கையாள்வது எளிதாக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola