மேலும் அறிய

USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்

USA Iran War: ஈரானின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

USA Iran War: பிராந்தியம் முழுவதும் நிரந்தரமான போர் நிறுத்தத்தை மையமாக கொண்டு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என ஈரான் பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்காவிற்கு பதிலளித்த ஈரான்:

அமெரிக்கா அண்மையில் அனுப்பிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான தனது தரப்பு விளக்கத்தை, பாகிஸ்தான் வழியாக ஈரான் அளித்துள்ளது. அதில், பிராந்தியம் முழுவதும் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதை மையமாக கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இயங்குவதாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் லெபனான் மீதான தாக்குதலும் அடங்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் இந்த பரிந்துரைகள் முற்றிலும் ஏற்கமுடியாதவை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். 

ஈரானால் இனி சிரிக்கவே முடியாது என மிரட்டல்

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்திற்கான உத்தரவாதங்களை அமைதி ஒப்பந்தம் கொண்டிருக்க வேண்டும் என ஈரான் விரும்புவதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம், மோதலை முடிவுக்குக் கொண்டுவருதல், ஹார்மஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவின் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடிஅயே, “கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக வாஷிங்டனுடன் ஈரான் இந்த விளையாட்டை விளையாடி வருவதாகவும், அவர்கள் இனி சிரிக்க மாட்டார்கள்" என்றும் சமூக வலைதளங்களில் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சுமூகமாக முடிக்க இருதரப்பும் தீவிரம்

பதற்றம் அதிகரித்து வந்தபோதிலும், வாஷிங்டன் தொடர்ந்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "மீண்டும் போர் நடவடிக்கைகளுக்குத் திரும்புவதற்கு முன்பு. ராஜதந்திரத்தி முறையில் எங்களால் முடிந்த ஒவ்வொரு வாய்ப்பையும் ட்ரம்ப் முன்னெடுத்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, 
நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, "செயல்பாடுகளைத் தொடர்வதற்கும், எதிரிகளுடன் வலிமையான மோதலை நடத்துவதற்கும் புதிய மற்றும் தீர்க்கமான வழிகாட்டுதல்களை வழங்கினார்" என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சிக்கலில் உலக நாடுகள்:

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், தனது அணுசக்தி நடவடிக்கைகளைக் குறைக்கவும் ஈரான் மறுத்தால், அமெரிக்கா மீண்டும் பெரிய அளவிலான குண்டுவீச்சைத் தொடங்கக்கூடும் என்று ட்ரம்ப் பலமுறை எச்சரித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் இந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியான போக்குவரத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இது உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் உரச் சந்தைகளைச் சீர்குலைத்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ராணுவம் ஏப்ரல் 13 முதல் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் 61 வர்த்தகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும், மேலும் நான்கு கப்பல்களைச் செயலிழக்கச் செய்ததாகவும் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று. இந்த முற்றுகையை மீற முயன்றதாகக் கூறப்படும் இரண்டு ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கின.

ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் எதிரிக் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை கடற்படை எச்சரித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் எப்போது வேண்டுமானாலும் முடிவடையலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Embed widget