நலம் காக்கும் ஸ்டாலின் - 5.95 லட்சம் பேர் பயன்
தமிழ்நாட்டில் கடந்த 10 வாரங்களாக சனிக்கிழமைகளில் நடைபெற்றுவரும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் இதுவரை 5.95 லட்சம் பேர் பயன். நேற்று நடைபெற்ற முகாமில் மட்டும் 65,687 பேர் பயன் பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்.18ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கணிப்பு
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு
தீபாவளியை ஒட்டி அக்.17ம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி.சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.1,800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5,000 ஆகவும், சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் ரூ.4,100 ஆகவும் உயர்வு.
'Mr PM, YOU ARE GREAT'
டெல்லியில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு! ட்ரம்புடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தில் (Mr PM, You are Great' என எழுதி கொடுத்த செர்ஜியோ!
பீகார் தேர்தல் தீவிரம்
பீகார் பேரவைத் தேர்தலில் சுமார் 100 இடங்களில் போட்டியிட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு.இந்தியா கூட்டணியில் இணைய நாங்கள் விருப்பம் தெரிவித்தபோதும் எந்த பதிலும் இல்லாததால், இந்த முடிவு என அக்கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் அக் தருல் இமான் தகவல்.
ஜடேஜாவின் ஆசை
"2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறேன். 2023ல் நெருங்கி வந்து கோப்பையை நழுவ விட்டோம். அதை வெல்ல வேண்டும் என்பது அனைவருக்குமே ஒரு கனவுதான். ஆஸ்திரேலிய தொடருக்கு என்னை தேர்வு செய்யாததற்கு தேர்வுக்குழுவுக்கு காரணங்கள் இருந்தன. நான் அணியில் இடம் பெற மாட்டேன் என்பதை முன்பே எனக்கு கூறிவிட்டனர்” - ஜடேஜா
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தலிபான் இஸ்லாமிய எமிரேட் படைகள் கைப்பற்றியதாக TOLO News தகவல்.Durand எல்லைக் கோட்டின் குறுக்கே 2 பாகிஸ்தானிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். இந்த தாக்குதலில் 12 பாக். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல வீரர்கள் காயம்.
மைதானத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிபி மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு. காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வெற்றி யாருக்கு?
மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு.
சாய் சுதர்ஷன் காயம்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது நாள் ஆட்டத்தில் CATCH புடிக்க முயன்றபோது சாய் சுதர்சனுக்கு கையில் ஏற்பட்ட காயத்தால், 3ம் நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்யமாட்டார் என BCCI தெரிவிப்பு. அவரின் காயம் பெரிதாக இல்லை, ஆனால் முன்னெச்சரிக்கையாக | இன்றையை போட்டியில் விளையாடவில்லை என விளக்கம்.