1.எவரெஸ்ட் – 8,848 மீட்டர்
எவ்ரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து பூமியின் மிக உயர்ந்த மலையாகும். இமயமலை தொடரில் அமைந்துள்ள இம்மலையானது சீனா-நேபாள எல்லை வழியாக செல்கிறது.
2.கே-2
கே-2 அல்லது காட்வின் ஆஸ்டின் மலையானது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது உயரமான மலையாகும். இது சீனா-பாகிஸ்தானுக்கு இடையில் அமைந்துள்ளது
3.கஞ்சன்ஜங்கா - 8,586 மீட்டர்
கஞ்சன்ஜங்கா கடல் மட்டத்திலிருந்து உலகின் மூன்றாவது உயரமான மலை. இது நேபாளத்திற்கும் இந்தியாவின் சிக்கிமிற்கும் இடையில் அமைந்துள்ளது,
4.லகோத்சே : 8,516 மீட்டர்
கடல் மட்டத்திலிருந்து உலகின் நான்காவது உயரமான மலை லோட்ஸே. இது சீனாவின் டிஏஆர் மற்றும் நேபாளத்தின் கும்பு பகுதிக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
5.மக்காலு: 8,463 மீட்டர்
மகாலு கடல் மட்டத்திலிருந்து உலகின் ஐந்தாவது உயரமான மலை. இது மகாலங்கூர் இமயமலையில் (எவரெஸ்ட் சிகரத்திலிருந்து தென்கிழக்கில் 19 கி.மீ) நேபாளத்திற்கும் - சீனாவின் டி.ஏ.ஆர்.க்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
6.சோ ஓயு: 8,485 மீட்டர்
கடல் மட்டத்திலிருந்து உலகின் ஆறாவது உயரமான மலை. இது சீனா-நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
7.தவுளகிரி-
8,167 மீட்டர் உயரம் கொண்ட மலையானது, கடல் மட்டத்திலிருந்து உலகின் ஏழாவது மிக உயர்ந்த மலையாகும். இது நேபாளத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இது வடக்கு மற்றும் தென்மேற்கில் பேரி ஆற்றின் துணை ஆறுகளாலும் சூழப்பட்டுள்ளது.
8.மனஸ்லு:
8163 மீட்டர் உயரம் கொண்ட மனஸ்லு மலையானது, கடல் மட்டத்திலிருந்து உலகின் எட்டாவது உயரமான மலை. இது நேபாள இமயமலையின் ஒரு பகுதியான மன்சிரி ஹிமாலில் அமைந்துள்ளது.
9.நங்க பர்வதம்
8126 மீட்டர் உயரம் கொண்ட நங்க பர்வதம் மலையானது, கடல் மட்டத்திலிருந்து உலகின் ஒன்பதாவது உயரமான மலையாகும். இது பாகிஸ்தானின் கில்கிட்-பலுசிஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
10: அன்னபூர்ணா:
8,091 மீட்டர் உயரமுள்ள அன்னபூர்ணா மலையானது, கடல் மட்டத்திலிருந்து உலகின் பத்தாவது உயரமான மலையாகும். இது வட-மத்திய நேபாளத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதி காளி கண்டகி பள்ளத்தாக்கால் சூழப்பட்டுள்ளது.