கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராம் மந்திர் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சேதப்படுத்திய சம்பவம் இரு நாட்டு மக்களிடையே எதிர்ப்பை தூண்டியுள்ளது.
டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், உடனடி நடவடிக்கைக்கு எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. “மிசிசாகாவில் உள்ள ராமர் கோயில் ஆண்டி - இந்தியன் கிராஃபிட்டியால் சிதைக்கப்பட்டதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தூதரகம் ட்வீட் செய்துள்ளது. 'மோடி பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் (பிபிசி)', 'சாந்த் பிந்த்ராவாலா தியாகி', 'இந்துஸ்தான் முர்தாபாத்' போன்ற வாசகங்களை மர்மநபர்கள் எழுதினர்.
பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன், இது ஒரு வெறுப்புவாத குற்றம் என்றும், அதிகாரிகள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். அவர் ட்விட்டரில், "@PeelPolice & @ChiefNish இந்த வெறுப்புவாத குற்றத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். 12 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத சுதந்திரம் என்பது கனடாவில் ஒரு சாசனம் மற்றும் நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். அனைவரும் அவரவர் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முடியும்." என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள இந்து கோவில் ஒன்று இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் மற்றும் படங்களால் சிதைக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, ஜனவரியில், பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோயிலில் இந்தியாவுக்கு எதிரான ஓவியங்கள் வரையப்பட்டது. இது கனடாவில் வாழும் இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், கௌரி சங்கர் கோயிலில் நடந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், இந்தச் செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறினார்.
தூதரக அலுவலகம் ஒரு அறிக்கையில், "பிரம்டனில் உள்ள இந்திய பாரம்பரியத்தின் சின்னமான கௌரி சங்கர் கோவிலை, இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து நாங்கள் கனேடிய அதிகாரிகளிடம் எங்கள் கவலையை தெரிவித்துள்ளோம்." முன்னதாக செப்டம்பர் 2022 இல், கனடாவில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திர் 'கனடிய காலிஸ்தானி தீவிரவாதிகளால்' இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் சிதைக்கப்பட்டது