இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகை அகிலா நாராயணன் அமெரிக்க ஆயுதப்படையில் வழக்கறிஞராக சேர்ந்து வரலாறு படைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘காதம்பரி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், அமெரிக்க ஆயுதப்படையில் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வந்த அகிலா, சினிமாவில் நடித்தது மட்டுமின்றி ஒரு ஆன்லைன் மியூசிக் வகுப்பையும் நடத்தி வந்துள்ளார். நைட்டிங்கேல் ஸ்கூல் ஆஃப் மியூசிக் என்ற ஆன்லைன் பாட்டு வகுப்பை நடத்தி வந்த அவர், அமெரிக்கா ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அதனை அடுத்து, அமெரிக்க ராணுவத்தில் இணைய பல மாதங்களாக பயிற்சி எடுத்து கொண்டுள்ளார். அந்த பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்த அவர், இப்போது அமெரிக்க ஆயுதப்படையின் வழக்கறிஞராக சேர்ந்துள்ளார்.
ராணுவத்தில் சேர்வதற்கு முன்பு, ஏ.ஆர் ரகுமானின் கே.எம் இசை பள்ளியில் முறையாக கற்று தேர்ந்துள்ளார். சில விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கும் அவர், மாடலிங் துறையில் சில காலம் பணியாற்றி இருக்கிறார். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி கலை துறையில் பணியாற்றி வந்துள்ளார். மாடலிங், இசை, சினிமா என பல துறையில் பணியாற்றி வந்த அகிலா, இறுதியில் ராணுவ சேவையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் ராணுவ துறையில் பணியாற்ற அவரது குடும்பத்தினர் ஆதரவு அளித்து ஊக்கமளித்துள்ளனர்.
இதனால், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்திருக்கும் முதல் தமிழ் பட நடிகை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். அவருக்கு, சினிமா வட்டாரத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்