இலங்கை- பேர வாவியில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனத்தை ஏரியில் தள்ளிவிட்டனர். போராட்டகாரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்தது. குறிப்பாக அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்தா ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபகச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏப்ரல் 9ல் இருந்து போராட்டம்..
உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லாததால், இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவில், பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகக் கோரி, கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மைனா கோ காமா மற்றும் கோட்டா கோ காமா போராட்ட இடங்களில், அரசு ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே இன்று ஏற்பட்ட வன்முறை சூழ்நிலையைத் தொடர்ந்து 130 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் நடந்துவரும் இடத்தில், இலங்கை அரசு ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து, திங்கட்கிழமை காலை வன்முறையும் குழப்பமும் ஏற்பட்டது.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகக்கோரி கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் போரட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.
இது ஒருபுறம் இருக்க இலங்கையின் பல பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலரும் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள், இலங்கை- பேர வாவியில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வாகனத்தை ஏரியில் தள்ளிவிட்டனர். போராட்டகாரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையின் ஆளுங்கட்சியான, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, தலைநகர் கொழும்புக்கு வெளியே இலங்கை அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில், சடலமாக மீட்கப்பட்டார்.