Sri Lanka Crisis LIVE: இலங்கையில் இன்று அதிபர் கோட்டாபய அரசுக்கு எதிராக தீர்மானமா..?
Srilanka Protests LIVE Updates: இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்களின் போராட்டம் குறித்த செய்திகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்
ABP NADULast Updated: 16 May 2022 06:40 PM
Background
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும், மின்சாரம் தினமும் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ள மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர்....More
இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. மேலும், மின்சாரம் தினமும் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ள மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக சாலைகளில் இறங்கி போராடி வந்த பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.இலங்கை அரசின் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடும் கோபத்திற்கு ஆளாகிய பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சி தலைவர்களின் வீடுகளில் தாக்குதலை நடத்தினர். மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மக்கள் ராஜபக்சேவின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். ஆளுங்கட்சியின் எம்.பி. ஒருவர் தன்னைத் தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அந்த நாட்டில் மக்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் புதிய அமைச்சராக 4 பேரை நியமித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். அரச சேவைகள் அமைச்சராக தினேஷ் குணவர்தனா, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகரா, நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன ரணதுங்கா ஆகியோர் கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சே மீது புகார். இதையடுத்து விரைவில் மகிந்த ராஜபக்சே உட்பட 7 பேர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Sri Lanka Crisis LIVE: பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை-மைத்திரிபாலா சிரிசேனா
இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று முன்னாள் அதிபர் மைத்திரிபாலா சிரிசேனா தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis LIVE: தற்போதைய ஜனாதிபதியின் கீழ் பதவி எதுவும் வேண்டாம்- சரத் பொன்சேகா
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைச்சர்கள் வீட்டில் பதுக்கப்பட்ட பருப்பு மூட்டைகள் கண்டுபிடிப்பு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகிய சூழலில் அந்த நாட்டு அமைச்சர்களின் வீடுகளில் இருந்து யூரியா மூட்டைகள், பருப்பு மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka Crisis LIVE: ராஜபக்சே மருமகள் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
மஹிந்த ராஜபக்சே மகனாகிய நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி வீரசிங்கே நாட்டைவிட்டு ஹெலிகாப்டர் மூலம் தப்பி ஓடும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Sri Lanka Crisis LIVE: இலங்கையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியது ஏன்? மனித உரிமைகள் ஆணையம் சம்மன்
இலங்கையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு காவல்துறைத் தலைவருக்கும், ராணுவத் தளபதிக்கும் மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையில் 1000 தொழிற்சங்கள் போராட்டம் அறிவிப்பு !
இலங்கையில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1000 தொழிற்சங்கள், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கிபோராட்டம் நடத்துகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அதுவரை போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றுவந்த நிலையில், பிரதமர் பதவி விலகலுக்கு பிறகு வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அலுவலகங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்
இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அலுவலகங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரானேவின் வீடு, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்கா ஃபெர்ணாண்டோ உள்ளிட்டோரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரா டென்னகூனில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது
டாம்புலாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரா டென்னகூனில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜான்சன் பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் பார் ஒன்றை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
முன்னாள் அமைச்சர் குமார் வெல்காமா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் உணவகம் ஒன்றிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்துச் சென்றனர். அரசியல்வாதிகள் 35-க்கும் மேற்பட்டோர் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனாவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் குமார் வெல்காமா பயணம்செய்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நள்ளிரவு 12 மணி வரையான விபரங்கள் - தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகளின் விபரம்..
இலங்கையில் நள்ளிரவு 12 மணி வரையான விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு 2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு 3-குருநாகல் மேயர் மாளிகை 4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம் 5-மொரட்டுவை மேயர் மாளிகை 6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு 7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு 8-ரமேஷ் பத்திரனவின் வீடு 9-சாந்த பண்டாரவின் வீடு 10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை 11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல் 12-அருந்திகாவின் வீடு 13-கனக ஹேரத்தின் வீடு 14-காமினி லொகுகேவின் வீடு 15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு 16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம் லான்சாவின் 17-2 வீடுகள் 18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு 19-யானை சபர் வீடு 20-பந்துல குணவர்தன வீடு 21. வீரகெட்டிய மெதமுலன வீடு 22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022 23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30 24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40 25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45 26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50 27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி 28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10 29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15 30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40 31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45 32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45 33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது வீசியெறியப்படும் கண்ணீர்புகைக்குண்டுகளை சாலை பாதுகாப்பு கூம்புகளை வைத்து செயலிழக்க செய்கின்றனர்.