Sri Lanka Crisis Live Updates: பிரதமர் பதவியிலிருந்து விலகும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு அருகே வந்த போராட்டக்காரர்களை விரட்ட காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டை வீசினர். இதையடுத்து, அங்கு தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்புதல். சபாநாயகர் இல்லதில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ரணில் ஒப்புதல் அளித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணிலும் பதவி விலக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது
இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில் அரசமைப்பு விதிகளின்படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று மாலை 5 மணியுடன் மூடுமாறு மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.எந்தவொரு சட்டபூர்வமான தன்மையும் இல்லாது பதவி வகிக்கும் பிரதமரின் கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி செல்லாது என்றும் சஜித் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைகத்திலிருந்து கடற்படைக்கு சொந்தமான சித்துரல மற்றும் கஜபாகு ஆகிய கப்பல்கள் சில நபர்களுடன் சென்றுள்ளன. குறித்த கப்பல்களில் சென்றது யார் என்பது தனக்கு தெரியாது என துறைமுக அதிபர் (ஹாபர் மாஸ்டர்) தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதுடன், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கு செல்லாமல் இருக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோட்டாபய உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய 16 எம்.பி.க்கள் வலியுறுத்தல்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வமான மாளிகையை விட்டு தப்பியோட்டியுள்ளார். கொழும்புவில் உள்ள மாளிகைக்குள் போராட்டகாரர்கள் நுழைந்த நிலையில் கோட்டாபய தப்பியோடியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் தடுமாறி வந்த இலங்கையில் ஏற்பட்ட மக்களின் மிக கடுமையான போராட்டத்தால், இலங்கையின் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்து, விக்கிரமசிங்க பிரதமர் பொறுப்பேற்றார்.
அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு பயந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச தப்பியோடினார்.
Background
இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தபய ராஜபக்சே தனது அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பிஓடினார்.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியால் தடுமாறி வந்த இலங்கையில் ஏற்பட்ட மக்களின் மிக கடுமையான போராட்டத்தால், இலங்கையின் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்து, விக்கிரமசிங்க பிரதமர் பொறுப்பேற்றார். ஆனாலும், கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை, நாட்டை மறுசீரமைக்க பணிகளை மேற்கொள்வதாக அதிபர் கோத்தபய கூறினாலும், நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வந்தது
இந்த நிலையில், இன்று காலை முதல் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்றும், கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் வழிதெரியாமல் பிதுங்கினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு ராணுவமும், போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் களைக்க முயற்சித்தனர்
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களால் கோத்தபய ராஜபக்ச அச்சத்திற்கு ஆளாகினார். அங்கிருந்து, ஆம்புலன்ஸ் ஒன்று மூலமாக அவர் தப்பியோடியதாகவும், அந்த ஆம்புலன்சில் அவருடன் அவரது குடும்பத்தினரும் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில் இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வளைக்கக்கூடும் என்ற உளவுத்துறையின் தகவல் முன்கூட்டியே கிடைக்கப்பெற்றதால் கோத்தபய ராஜபக்ச நேற்றே ராணுவ தலைமை அலுவலகத்திற்கு தப்பிச்சென்றார் என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை வெடித்து வரும் நிலையில், அந்த நாட்டில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -