Trump White House Dinner: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை வருடாந்திர நிகழ்வில், 5 முதல் 8 முறை வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின், வருடாந்திர இரவு விருந்தானது சனிக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஹில்டன் எனப்படும் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிய்ல் அதிபர் ட்ரம்ப் பங்கேற்று இருந்தபோது, நிகழ்வை சீர்குலைக்கும் விதமாக அங்கு 5 முதல் 8 முறை வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ட்ரம்ப், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் அங்கிருந்து உடனடியாகவும், பத்திரமாகவும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதிபருக்கு எந்தவித தகவலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரு நபர் மட்டுமே எதிர்பாராத நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
5 முதல் 8 தோட்டாக்கள் பாய்ந்தன..
அதிபருடன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்டோரும் பங்கேற்று இருந்தனர். வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஐந்து முதல் 8 தோட்டாங்கள் சுடப்பட்ட சத்தத்தை விருதினர்கள் கேட்டுள்ளனர். ஒரே ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினாலும், அந்த நபரின் தற்போதைய நிலை என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கை ஏதும் இதுவரை அரசு தரப்பில் வெளியிடவில்லை.
குழப்பமும்..பாதுகபபு நடவடிக்கைகளும்..
தேசிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கூடியிருந்த அவையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதிபரின் உரைக்கு முன்னதாகவே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. சத்தம் கேட்டதும் தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக உள்ளே நுழைந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டுள்ளனர். உயிர் பயத்தில் சில கூச்சலிட்டதால் அந்த பகுதி களேபரமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்தில் அதிபராக பங்கேற்ற முதல் நிகழ்வே இப்படி தடம்மாறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விருந்தினர்களிடையே விசாரணையை முடுக்கிவிட்டு இருப்பதோடு, கண்காணிப்பு கேமராக்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
ட்ரம்ப் சொல்வது என்ன?
தாக்குதல் சம்பவம் தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவாகவும் தைரியமாகவும் செயல்பட்டதற்காக அமெரிக்க இரகசிய சேவை மற்றும் பிற பிரிவினருக்கும் பாராட்டுகள். திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சியைத் தொடர விடுவோம் என்று நான் பரிந்துரைத்துள்ளேன், ஆனால், இது முற்றிலும் சட்ட அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின்படியே நடக்கும். அவர்கள் விரைவில் ஒரு முடிவை எடுப்பார்கள்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
