Guinness Record: ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலீவ் என்பவர் 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


குழந்தை வரம்:


இந்திய கலாச்சாரத்தின்படி, குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். நமது பெற்றோருக்கு முந்தைய தலைமுறையினர் மத்தியில், பல குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது சர்வ சாதாரண காரியமாக இருந்தது. முந்தைய தலைமுறையினர் அதிகபட்சம் 2 குழந்தைகள் போதும் என திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டனர். ஆனால், இன்றைய தலைமுறையினரோ குழந்தை என்பது கூடுதல் சுமை, எனவே குழந்தை இன்றியே வாழ்க்கையை கடத்திவிடலாம் என கருதுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், ஒரு பெண் 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 


69 குழந்தைகளை பெற்று உலக சாதனை:


இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு மிகவும் வலுவாக இருக்க வேண்டும். பிரசவ வலி என்பது மரணத்தை உணர செய்யும் அளவிற்கு கொடியது. ஆனால், அந்த வலியை பொருட்படுத்தாமல் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 67 குழந்தைகளை பெற்றெடுத்து சூப்பர் வுமன் ஆகியுள்ளார். அவரது பெயர் வாலண்டினா வாசிலீவ். இந்த ரஷ்ய பெண்மணி 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்தார். மொத்தத்தில் அவர் தனது வாழ்நாளில் 27 முறை கருவுற்று இருக்கிறார். இதன் மூலம் வாழ்நாளில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.


27..69.. எப்படி சாத்தியம்?


27 முறை கருவுற்றால் 69 குழந்தைகள் எப்படி சாத்தியம் என்பதே தற்போது பலரது கேள்வியாக இருக்கலாம். அதற்கான விடையாக, வாலண்டினா 16 முறை இரட்டையர்களையும், ஏழு முறை ஒரே அடியாக மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே அடியாக 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில், அதுவும் இத்தனை முறை குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.இந்த சம்பவம்  1725 முதல் 1765 காலகட்டத்திற்கு இடையில் நிகழ்ந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.


2 பேர் மரணம்:


வாலண்டினா வாசிலீவா ரஷ்யாவைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவர் தனது கணவனுக்கு இரண்டாவது மனைவி ஆகும். முதல் மனைவிக்கு 8 குழந்தைகள் இருந்த நிலையில், இரண்டாவது மனைவியான வாசிலீவா 69 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவர்களில் 67 பேர் நலமுடன் உள்ளனர்.  இருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உடல் ஆரோக்கியம்


ஒரு பெண்ணால் தனது வாழ்நாளில் எத்தனை குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதற்கு பொதுவாக துல்லியமான பதில் ஏதும் இல்லை. ஆனால் சில சமயங்களில் அது சாத்தியமாகலாம் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தையை பெண்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வாசிலீவ் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்தது அவரது இனப்பெருக்க ஆரோக்கியம் மிகவும் வலுவாக இருந்ததை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கருவுறுதல் மற்றும் பிரசவத்தின் போது ஒருவர் உடல் ரீதியாக பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பமானதற்குக் காரணம், அவருக்கு நல்ல இனப்பெருக்க ஆரோக்கியம் இருந்திருப்பதையே உணர்த்துகிறது. அதனால்தான் வாசிலீவ் எந்த பிரச்சனையும் இல்லாமல் 27 முறை கர்ப்பமாகி 69 பேரை பெற்றெடுத்ததாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.