உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் குண்டு மழை பொழிந்தும், ஏவுகணை தாக்குதலையும் ரஷ்யா கையில் எடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, சைபர் தாக்குதலையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட வைரஸ் தாக்குதல் மூலம் உக்ரைனின் முக்கிய வெப் சைட்களை ரஷ்யா முடக்கியுள்ளது. அரசின் இணையப்பக்கங்கள் பல முடங்கியுள்ளதால் உக்ரைன் திணறி வருகிறது.