உக்ரைன் நாட்டில் கடந்த 4 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிகாரிகள் பெலாரெஸில் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏர்இந்தியா விமானங்களை அனுப்பி இந்திய மாணவர்களை மீட்க முயற்சி செய்து வருகிறது.
ஏற்கனவே, பல மாணவர்கள் ரூமேனியா வழியாக மீட்கபட்டு வந்த நிலையில், இன்னும் அதிகப்படியான மாணவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான சையது அக்யார் அகமத் என்ற எம்.பி.பி.எஸ் மாணவர் ஒருவர் உக்ரைனில் இருந்து தனது பெற்றோர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அதில், உக்ரைன் ரஷ்யா போரால்,சக மாணவர்களோடு கார்கிவ் நகர், உடாடா என்ற இடத்தில் பதுங்குமிடத்தில், 20 மாணவர்களிடம் தங்கி உள்ளோம். அங்கு10 டிகிரி செல்ஷியஸ் பனிப்பொழிவு உள்ளது.
மூன்று நாட்களாக உணவு, குடிநீரின்றி இல்லாமல் காய்ச்சல் வந்துவிட் டது. அந்த இடத்தில் வழியும் சாக்கடை நீரை சுத்தம் செய்து குடித்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்களை வாங்க அருகிலுள்ள கடைக்கு சென்ற மாணவர் ஒருவர் மீது குண்டு விழுந்து இறந்ததால் பதுங்கும் இடத்திலேயே இருக்கிறோம். அவரை மீட்கும் படி பேர்ணாம்பட்டு வருவாய்த் துறையினரிடம், மாணவரின் பெற்றோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்து தொடர்பாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ”ரஷ்யா உடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் அதை பெலாரெஸில் வைத்து நடத்தக் கூடாது. ஏனென்றால், பெலாரெஸ் நாடு மூலம் தான் உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அங்கு இருந்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்