US Iran Israel War: அடிக்கு அடி தான்..! அடுத்த கட்டத்துக்கு போயாச்சு - ஈரான் வார்னிங், ரொம்ப மோசம் என ட்ரம்ப் கவலை
US Iran Israel War: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான மோதலுக்கு மத்தியில் ஹார்மஸ் நீர்வழிப்பாதையை கையாள்வதில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதாக, ஈரானின் உச்சபட்ச தலைவரான மொஜ்தாபா அறிவித்துள்ளார்.

US Iran Israel War: ஹார்மஸ் நீர்வழிப்பாதை விவகாரத்தை ஈரான் மோசமாக கையாளப்படுவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மொஜ்தாபா எச்சரிக்கை..
ஹார்மஸ் நீர்வழிப்பாதை தொடர்பான நாட்டின் அணுகுமுறையில் மிக முற்றிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, ஈரானின் உச்சபட்ச தலைவர் மொஜ்தாபா தெரிவித்துள்ளார். அவரது பெயரில் அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய அறிக்கையில், நீர்வழிப்பாதையை நிர்வகிப்பதில் ஈரான் ஒரு புதிய கட்டத்திற்கு சென்றுவிட்டதாகவும், நாட்டை தாக்கியவர்கள் தண்டிக்கப்படமால் தப்பிக்கவிடமாட்டோம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் ராணுவ நடவடிக்கைடால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோர தெஹ்ரான் திட்டமிட்டுள்ளதாகவும், இது உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றை ஈரான் நிர்வகிப்பதில் ஒரு முக்கிய புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் மொஜ்தாபா விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் ஹார்மஸ் வழியாக செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்து இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
திருப்பி அடிப்பது உறுதி..
.மொஜ்தாபாவின் அறிக்கையில், “ஈரானுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு சேதத்திற்கும், வீரர்களின் தியாகத்திற்கும், இந்தப் போரில் காயமடைந்தவர்களுக்கும் நாங்கள் நிச்சயமாக இழப்பீடு கோருவோம்” என மொஜ்தாபா சூளுரைத்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட தனது தந்தை அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்குவதில் ஈரானின் அசைக்க முடியாத உறுதியுடன் இருப்பதாகவும் பேசியுள்ளார். ஈரான் போரை விரும்பவில்லை என்றாலும், அது தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது என்று மொஜ்தாபா திட்டவட்டமாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜலசந்தி வழியாக போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான இரண்டு வார கால நிலையற்ற போர் நிறுத்தம் தற்போதும் அமலில் உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார் ஆன இஸ்ரேல்..
பெஞ்சமின் நேதன்யாகு பெயரில் இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என லெபனான் மீண்டும் மீண்டும் விடுத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுடன் கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு அமைச்சரவைக்கு அறிவுறுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவது மற்றும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அமைதி உறவுகளை ஏற்படுத்துவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும். பெய்ரூட்டை ராணுவமயமற்றதாக்க வேண்டும் என்ற லெபனான் பிரதமரின் இன்றைய அழைப்பை இஸ்ரேல் பாராட்டுகிறது என்றும் நேதன்யாகுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரம் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானால் ட்ரம்ப் அதிருப்தி..
ஹார்மஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதை ஈரான் கையாளும் விதத்தை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹார்மஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமாக, சிலர் கூறுவது போல் கண்ணியமற்ற முறையில் செயல்படுகிறது. இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல” என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு, ஈரான மக்களவை சபாநாயகர் தலைமையிலான குழு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























