விமானத்தில் வைத்து 25 இளம்பெண்ணை 90 வயது முதியவர் திருமணம் செய்தது தொடர்பான, நெட்டிசன்கள் இருவேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Continues below advertisement

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்:

காதலுக்கு கண் இல்லை என்பது ஒரு பழங்கால வார்த்தையாகும். அதன் தொடர்ச்சியாக சாதி, மதம், நாடு, இனம் மற்றும் வயது வித்தியாசம் என்பதும் ஒரு பொருட்டில்லை என ஆகிவிட்டது. அதற்கான உதாரணமாக தான், அண்மையில் நடந்த திருமணம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் திருமண விழாவின் காட்சிகள் என குறிப்பிட்டு,  @robertamezcuaphotography எனும் இன் இன்ஸ்டாகிராம் கணக்கில் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. மேகங்களுக்கு மத்தியில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரை புலம்பச் செய்துள்ளது.

இளம்பெண்ணை மணந்த முதியவர்:

புகைப்படங்களின்படி, தனியார் விமானத்தினுள் மலர் அலங்காரங்களால் சூழப்பட்ட நிலையில் ஒரு ஜோடி திருமண சபதத்தை ஏற்றுக்கொள்கிறது. 90 வயதான மணமகனும், 25 வயதான மணமகளும் 65 வயது வித்தியாசத்தில் இந்த திருமணம் அரங்கேறியுள்ளது. அந்த பதிவில், “பல ஆண்டுகளாக ஏராளமான திருமணங்களை ஆவணப்படுத்திய நிலையில், இந்த அனுபவம் தான் முன்பு கண்ட எதிலிருந்தும் தனித்து நிற்கிறது. காதல் கதைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது, அதுதான் அவற்றை மறக்க முடியாததாக ஆக்குகிறது” என அந்த புகைப்படக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அந்த தம்பதி குறித்த தனிப்பட்ட விவரங்கள் எதையும் புகைப்படக் கலைஞர் வெளியிடவில்லை.

பேசுபொருளான புகைப்படங்கள்:

இந்த காணொளி பரவலாகப் பரவியதால், சமூக ஊடக பயனர்கள் கருத்துப் பகுதியை உணர்ச்சிபூர்வமான பதில்களால் நிரப்பினர். பல பார்வையாளர்கள் கேமராவில் படம்பிடிக்கப்பட்ட சிறிய, நெருக்கமான சைகைகளில் கவனம் செலுத்தினர். "அவள் அவன் மூக்கை முத்தமிடும் விதம் மிகவும் மனதைக் கவரும்" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதினார். மற்றொரு கருத்துரையாளர், "இந்த வகையான அன்பு நம் அனைவரையும் கண்டுபிடிக்கட்டும்" என்று கூறினார். ஏராளமானோர் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். ஒரு சிலர் வயது வித்தியாசத்தை குறிப்பிட்டு எதிர்மறையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். இளைஞர்களுக்கே மணமகள் கிடைக்காத நிலையில், இவருக்கு மட்டும் எப்படி? பணம் தான் காரணமா? இத்தகைய கருத்துகளுக்கு மத்தியிலும், நேர்மறையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகள் மேலோங்கி நிற்கின்றன.