பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்:
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து சுமார் 91 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் துருக்கி- சிரியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். கிழக்கு ஆசியா நாடுகளில் அவ்வப்போது, எரிமலை உருவாவது வழக்கமாக இருக்கும். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அம்மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
பூமியின் மேல் அடுக்கில் உள்ள தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் உருவாவதற்கான முக்கிய காரணிகளாகும்
.Also Read: Watch Video: திக் திக்! நடுவானில் கழன்று விழுந்த விமானத்தின் டயர் - 200 பயணிகளின் நிலை என்ன? பரபர வீடியோ!