இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்-
  முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மகிந்த தேசப்பிரிய. இலங்கையின் தற்போதைய நிலையில் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகவும் அவசியமானது என இலங்கையின் முன்னாள் தேர்தல் தலைமை அதிகாரி மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

 

மக்கள் ஆணையின் மூலமே இலங்கையின் புதிய அரசு உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தி இருக்கிறார்.தற்போது மக்கள் ஆணையில்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசே இருப்பதால்,   வெகுவிரைவில் தேர்தல் நடத்துவதே மிகச்சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் புதிய அரசு ,புதிய அமைச்சரவை என்ற முழக்கத்துடனே தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் .

அந்த வகையில் இலங்கையின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதே சிறப்பு என்றும் தற்போது தனது கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.நாட்டின் தற்போதைய நிலைமையும், மக்கள் அரசின் மீது தற்போது கொண்டிருக்கும் வெறுப்பு மனப்பான்மையையும் கருத்தில் கொண்டு ,மக்களால் தேர்வு செய்யப்படும் ஒரு அரசை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமது கருத்து என முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

 

கடந்த 2019 அதிபர் தேர்தல் ,2020 பொதுத் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருந்ததாகவும் ,ஆனால் தற்போது அது இலங்கையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.ஆகவே ஒரு நாட்டில் மக்கள் ஆணை என்பது ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தற்போது இருக்கும் இலங்கை அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.

 

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை மிக விரைவாக நடத்தி, மக்களின் தேர்வுக்கு இடம் அளிக்க வேண்டுமென மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஒரு பொதுத் தேர்தலை நடத்த, ஜனநாயகத்தை நிலை நாட்ட ,அதற்கான செலவினங்களை ஏற்பதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாக திகழ்வதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.இலங்கையில் தேர்தலை நடத்துவதற்கும், அந்தப் பணிகளில் அரசு துறை அதிகாரிகள் இலவசமாக  பணியாற்றுவதற்கும் தயாராக இருப்பதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.தற்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் சிக்கலான நிலையில், மக்களின் அரசியல் அபிப்பிராயத்தை கண்டறிவதற்கு பொது தேர்தல் ஒன்றே சிறந்த வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்

 

தற்போதைய அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தால் ,தேர்தலுக்கு ஏற்படும் செலவை குறைத்து சட்டப்படி பொது தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்திருக்கிறார்.அதேவேளை தற்போது இலங்கையில் தேர்தல் ஒன்றுக்கு அவசியம் இல்லை என நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பினர் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது .அதேபோல் ஒரு சில அரசியல் கட்சிகள் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

 

 இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மகிந்த தேசபிரிய தேர்தல் நடத்துவதே சிறந்த வழி எனவும் கூறி இருக்கிறார் .ஆகவே இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது  அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது .இது தேர்தலை நடத்த வழி அமைக்குமா, அல்லது நாடாளுமன்ற காலத்தை கூட்டிக் கொடுக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மேலும், தற்போதுள்ள அரசியல் நிலைமையில் மக்களின் அபிப்பிராயத்தை கண்டறிவதற்கு பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு ஏற்படும் செலவையும் குறைத்துக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.