பாகிஸ்தானின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஒரு சிறுவனை பளார் என்று கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலானது. பெண் நிருபரின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், தான் நடந்து கொண்டதற்கான காரணத்தை அந்த பெண் நிருபரே தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். மைரா ஹஷ்மி என்ற அந்த நிருபர் பக்ரீத் பண்டிகை விழாவிற்காக கடந்த 9-ந் தேதி ஒரு குடும்பத்தை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுதொடர்பாக, மைரா ஹஷ்மி தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் அந்த குடும்பத்தை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த சிறுவன் அந்த குடும்பத்தை தொல்லை செய்து கொண்டிருந்தான். அதனால், அந்த குடும்பத்தினர் மிகவும் உளைச்சல் ஆனார்கள். இதன்காரணமாகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். “ என்று பதிவிட்டதுடன் அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான பிறகு பெண் நிருபரின் செயலுக்கு பலரும் கடும் கண்டனங்கள் தெரவித்தனர். குறும்பு செய்த சிறுவனை தாக்கிய பெண் நிருபரின் செயல் தேவையற்றது என்று பலரும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் சிலர் பெண் நிருபர் செய்தது சரியே என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் அந்த பெண் நிருபர் பொய் சொல்கிறார். அவர் தன் மீது கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். அந்த வீடியோவில் சிறுவன் அந்த குடும்பத்தை தொல்லை செய்தது போன்றே இல்லையே? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க : Gotabaya Rajapaksa: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வைரல்
மேலும் படிக்க : Gotabaya to Saudi : மாலத்தீவில் தரையிறங்கிய தனியார் ஜெட்.. சிங்கப்பூரில் இருந்து சவுதிக்கு செல்ல தயாரான கோட்டபய?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்