பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கீழ் குர்ரம் பகுதியில், பயணிகள் வேன்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வடமேற்கு பாகிஸ்தான் குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரண்டு பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என்றும் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைமைச் செயலாளர் நதீம் அஸ்லாம் சௌத்ரியின் கூற்றுப்படி, பெஷாவர் மற்றும் பராசினாருக்கு இடையே பயணித்த இரண்டு பயணிகள் வாகனங்களின் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலில் சுமார் 10 பேர், வாகனங்களை நோக்கிச் சாலையின் இருபுறமும் கண்மூடித்தனமாக சுட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
பாகுஸ்தான் அதிபர் கண்டனம்:
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்ததாவது, “ இத்தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறையானது, பெரும் கணடனத்துக்குரியது.
இப்பகுதி நீண்ட காலமாக ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்களுக்கு இடையிலான பதட்டங்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. இத்தாக்குதல் நடத்தியவர்கள், யார் என்பது குறித்தான அடையாளம் தெரியவில்லை, மேலும் இத்தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இந்த பதற்றமான பகுதியில், அவ்வப்போது மோதல் நடைபெற்றுவரும் பகுதி என கூறப்படுகிறது. இப்பகுதியானது, இந்த ஆண்டு பல தாக்குதல்களை கண்டுள்ளது. அக்டோபரில், இதேபோன்ற வன்முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.