மேலும் அறிய

Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு

அதிரடிக்கு பெயர் போன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டு, உற்பத்தியை இரண்டரை மடங்க உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட அணு ஆயுதம் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு உயர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆலையை பார்வையிட்ட கிம் ஜாங் உன்

சர்வதேச தடைகளை மீறி, கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில், வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. அதில், அணு ஆயுதத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் இன்னும் பிற பெருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தளவாட உற்பத்தி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக, கிம் ஜாங் உன் அங்கு நேரில் சென்றார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, எவுகணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்த அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரியாவின் சக்திவாய்ந்த Hwasong-II ரக ஏவுகணையும் உற்பத்திப் பிரிவில் அவர் ஆய்வு செய்த படங்கள் வெளியாகி, உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

கிம் ஜாங் உன் கூறியது என்ன.?

அதைத் தொடர்ந்து பேசிய கிம் ஜாங் உன், ஏவுகணைகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும் என்றும், விரைவில் நடைபெற உள்ள 9-வது மத்திய குழு கூட்டத்தில், உற்பத்தி விரிவாக்கம் குறித்த முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கு ஏவுகணைகள் வழங்கிய வட கொரியா.?

சீனாவின் அண்டை நாடாக இருந்தாலும், வட கொரியா சமீப காலங்களில் ரஷ்யாவிடமே அதிக நெருக்கம் காட்டி வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கூட, ஏராளமான வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுக்காக போர்புரிய போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

அதோடு, ரஷ்யாவிற்கு ஏவுகணைகளையும் வட கொரியா ரகசியமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்குமாறு வட கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா செல்லும் சீன அதிபர்

இதனிடையே, மற்றொரு முக்கிய நிகழ்வாக, சீன அதிபர் ஷி ஜின்பிங், நாளை வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.  அணு ஆயுத சக்தி கொண்ட வட கொரியா உடன் மீண்டும் உறவுகளை புதுப்பிக்கும் விதமாக, சீன அதிபர் அங்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அவர் வட கொரியாவிற்கு சென்றிருந்தார். அதன் பின்னர், 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அங்கு செல்ல இருக்கிறார்.

முன்னதாக, வட கொரியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா இருந்துள்ளது. சீனாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நட்புடன் பழகி வருகிறார். இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வட கொரிய பயணம், உலக அளவில் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget